சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக நாளை தனக்கும் ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற குறித்த அதே நேரத்தில் நான் கயல் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எழில் பேசிக் கொண்டிருக்கிறார். அதை கேட்ட கயல் மனம் நெகிழ்ந்து போய் கண்ணீருடன் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

எழில் இவ்வாறு கூறிக் கொண்டிருக்கும் சமயத்தில் அந்த இடத்திற்கு வரும் ரவுடிகள் சிலர் கயிலின் தம்பியை அடித்துக் கொண்டு போகின்றனர். இப்போது ஏன் என்ன நடந்தது? எதற்காக இவனை அடித்து அழைத்துப் போகிறீர்கள் என கயல் கேட்க பணத்தை வாங்கிக் கொண்டு இவன் திருப்பி தரவே இல்லை எனவே பணத்தை கொடுக்குமாறு கயலின் தம்பியை மண்டபத்திலேயே அடித்து துவைத்து புதிதாக பிரச்சனையை கிளப்பி இருக்கின்றனர். இதனால் எழில் மற்றும் கயலின் திருமணம் நடைபெறுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஏற்கனவே கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா என்பது குறித்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இயக்குனர் கதையை நீட்டிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிதாக அடுத்த பிரச்சனையை கிளப்பிக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் சற்று சோர்வடைந்து இருக்கின்றனர் மேலும் விரைந்து கயலுக்கும் எழிலுக்கும் திருமணத்தை நடத்தி முடிக்குமாறு அவர்கள் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv