ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஆதிகுணசேகரன்.! போடு செம்ம ட்விஸ்ட்டா போகுதே.!

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் வகையில் தற்போது ஜீவானந்தம் இருக்கும் இடத்தை ஆதி குணசேகரன், ஞானம், கதிர் என அனைவரும் கண்டுபிடித்து இருக்கின்றனர். அதுபோல ஜனனியும் அந்த இடத்தை கண்டுபிடித்து சரியாக வந்திருக்கிறார். அப்பத்தாவின் 40% பங்குகள் தனது பெயருக்கு தான் வரும் என்று குணசேகரன் மனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். அதே சமயம் அப்பத்தாவின் 40 சதவீத பங்குகள் அவருக்கு சென்று விடக்கூடாது என்று ஜனனி ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் ஜீவானந்தம் தற்போது அந்த 40% பங்குகளை அவர் பெயருக்கு மாற்றி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஆதிகுணசேகரன்.! போடு செம்ம ட்விஸ்ட்டா போகுதே.! 1

விளம்பரம்

இந்த விஷயத்தை ஆடிட்டர் வந்து தற்போது ஆதி குணசேகரனிடம் கூறுகிறார். இந்த விஷயத்தை தெரிந்து கொள்ளும் ஜனனி, ஆதி குணசேகரன் தான் ஜீவானந்தம் என்கிற ஆளை வைத்து சொத்தை அவர் பெயருக்கு மாற்றி இருப்பதாக கோவப்பட்டு கொண்டிருக்கிறார். ஆனால் உண்மையில் ஆதி குணசேகரனுக்கும் ஜீவானந்தம் யார் என்றே தெரியாது. இதனால் தற்போது ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் ஜீவானந்தம் இருக்கும் இடத்தை தேடிப் போகின்றனர். அந்த இடத்தை கண்டுபிடிக்கும் பொழுது அங்கு ஜீவானந்தம் உதவியாளர் ஃபர்ஹானா நின்று கொண்டிருக்கிறார். தற்போது ஃபர்ஹானாவிடம் கதிர் சண்டை போட கதிரின் கையைப் பிடித்து முறுக்கி ஃபர்ஹானா பதிலுக்கு சண்டை போடுகிறார். அந்த சமயத்தில் ஜனனி அந்த இடத்திற்கு வருகிறார்.

தொடர்புடையவை  சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த விஜய் டிவி நட்சத்திரங்கள்.! இதோ திருமண ஆல்பம்..!

ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ஆதிகுணசேகரன்.! போடு செம்ம ட்விஸ்ட்டா போகுதே.! 3
அப்போது அவர் அன்றைக்கு வீட்டில் அப்பத்தாவிடம் கையெழுத்து பெற ஒரு ஆள் உன்னுடன் வந்தானே நீங்கள் யாரென்று கோபத்துடன் கேள்வி எழுப்புகிறார். இந்த பரபரப்புடன் தற்போது அந்த சீரியல் முடிவடைந்து இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment