CWC-ல் இருந்து நிரந்தரமாக விடைபெறும் சிவாங்கி.! புகைப்படத்துடன் அவர் போட்ட கடைசி போஸ்ட்.!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செட்டில் இருந்து கடைசியான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் சிவாங்கி. எமோஷனலாக பதிவிட்ட அந்த பதிவுக்கு கீழே பலரும் சிவாங்கிக்கு ஆறுதலை கூறி வருகின்றனர். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பலரின் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவர்தான் சிவாங்கி. சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலை பாடிய பின்னியின் மகளான இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியாமல் போனது் ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பலரின் மனங்களை கவரந்து இருக்கிறார் சிவாங்கி. முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக வந்த சிவாங்கி தற்போது நான்காவது சீசனில் குக்காக வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சிவாங்கி குக்காக வருகிறார் என்றவுடன் பலருக்கும் ஆச்சரியம் எழுந்தது.

CWC-ல் இருந்து நிரந்தரமாக விடைபெறும் சிவாங்கி.! புகைப்படத்துடன் அவர் போட்ட கடைசி போஸ்ட்.! 1

விளம்பரம்

பிரபல செஃப் ஒருவரின் உதவியுடன் சமையலை கற்றுக்கொண்டு தற்போது சமையலில் அசத்தி வருகிறார். இந்த நிலையில் சீசன் 4 விரைவில் முடியடைய இருக்கிறது. அடுத்தபடியாக பிக் பாஸ் தொடங்கி இருப்பதால் விரைவில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இறுதி நாள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு விட்டதாகவும் சிவாங்கி தான் டைட்டில் வின்னராகி இருப்பதாகவும் தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் இருக்கிறது. இனிமேல் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார் சிவாங்கி. இது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே மணிமேகலை பாலா போன்றவர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்க்க பிடிக்கவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சிவாங்கி இந்த சீசனுடன் விடை பெற்றுக் கொள்ள இருக்கிறார். இறுதிக்கட்ட ஷூட்டிங் முடிந்ததால் சிவாங்கி தனது instagram பக்கத்தில் எமோஷனல் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

தொடர்புடையவை  பசுபதி கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ

CWC-ல் இருந்து நிரந்தரமாக விடைபெறும் சிவாங்கி.! புகைப்படத்துடன் அவர் போட்ட கடைசி போஸ்ட்.! 3

விளம்பரம்

அதில் அவர் பதிவில் சீசன் போரின் செட்டில் கடைசியாக ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து இருக்கிறார். அதை பதிவிட்டு அவர் நான்கு ஆண்டுகள், நிறைய அழகிய தருணங்கள், நிறைய கனவு தருணங்கள், விடைபெறுகிறேன் என்று சொல்வதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது என்று சொல்லி இதயம் நொறுங்குவது போன்ற எமோஜியுடன் பதிவிட்டு இருக்கிறார். இரவு 12:26 மணிக்கு எடுக்கப்பட்ட அந்த கடைசி நாள் ஷூட்டிங்கில் இருந்து இந்த புகைப்படத்தை அவர் பதிவிட்டு இருக்கிறார். தற்போது பலரும் சிவாங்கியின் இந்த பதிவிற்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர். சிவாங்கி இல்லாமல் இனி குக் வித் கோமாளி எப்படி இருக்க போகிறதோ என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..!

விளம்பரம்

Leave a Comment