குக் வித் கோமாளி சீசன் 4 இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது செலிப்ரேஷன் ரவுண்டு ஒன்று நடைபெற்று இருக்கிறது. இந்த செலிப்ரேஷன் ரவுண்டுக்காக சீசன் 2வில் இருந்து தர்ஷா குப்தா, மதுரை முத்து, தீபா ஷங்கர், ஷகீலா மற்றும் ரித்திகா என பலரும் வருகை தந்திருக்கின்றனர். மதுரை முத்து சமையலை நடுவர்கள் கிண்டல் அடிக்கின்றனர். பெயரைக் கூட சொல்ல தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார் மதுரை முத்து. அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவி மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்களிலேயே பல பார்வையாளர்களைப் பெற்று முதலிடம் வகித்து வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சீசன் நான்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இறுதி சுற்று ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது. அதற்கான ஷூட்டிங் தற்போது நிறைவடைந்து இருக்கிறது. சிவாங்கி கூட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து நிரந்தரமாக விடை பெறுவதாகவும் நான்கு வருடப் பயணம் இத்துடன் நிறைவடைந்து இருப்பதாகவும் தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இறுதிச்சுற்று எபிசோடு ஒளிபரப்பாகும் முன்பு முந்தைய சீசன்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து செலிப்ரேஷன் ரவுண்டு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். அந்த வகையில் இந்த வாரமும் சீசன் 2வில் இருந்து ஐந்து குக்குகள் வருகை புரிந்திருக்கின்றனர். மேலும் இத்தனை நாட்களாக கோமாளியாக வராமல் இருந்த வெட்டுக்கிளி பாலாவும் இந்த வாரம் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மதுரை முத்து ஒரு உணவை சமைத்துக் கொண்டு வந்து வைக்கிறார். அதைப் பார்த்த செஃப் தாமு சிரித்துக் கொண்டு, “யோவ் முத்து இது என்னதுயா” என்று கேட்கிறார். அப்போது அவருக்கு அதன் பெயர் சொல்லத் தெரியாமல் எதை வைத்து சமைத்தாரோ அந்த காய்கறி எல்லாம் தூக்கிக் கொண்டு வந்து காட்டுகிறார். பின்னர் மணிமேகலை இதன் பெயர் என்ன? என்று சொல்லுங்கள் என்று கேட்க, “சிக்கன் லாவண்யா” என்று சொல்கிறார் சிக்கன் லசாங்கியா என்று சொல்வதற்கு பதிலாக அவர் இவ்வாறு சொல்லி காமெடியை ஏற்படுத்தியிருக்கிறார். அந்த ப்ரோமோ காமெடியாக வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television