படம் ரொம்ப சூப்பரா இருக்கு.! அர்ஜுன் தாஸின் அநீதி படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.!

நடிகர் அர்ஜுன்தாஸ், துஷாரா விஜயன், வனிதா விஜயகுமார் போன்ற பலரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் அநீதி. அந்த படம் குறித்து தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். பொதுமக்கள் பலரும் இந்த படம் மிக நன்றாக இருப்பதாக பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் அநீதி. அர்ஜுன் தாஸ் முதன்மை ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸ் ஒரு உணவு விநியோகம் செய்யும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ஆதரவற்ற அவருக்கு அந்த வேலையின் மூலமாக பல அவமானங்கள் ஏற்படுகிறது. இந்த அவமானத்தால் சைக்கோவாக மாறும் அவர் கொலைகளில் ஈடுபடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படம் ரொம்ப சூப்பரா இருக்கு.! அர்ஜுன் தாஸின் அநீதி படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 1
இதற்கிடையே அவருக்கு மற்றொரு ஆதரவில்லாத பெண்ணான துஷாரா விஜயனுடன் காதல் ஏற்படுகிறது. துஷாரா விஜயன் வேலை பார்த்து வரும் முதலாளி பெண்மணி மர்மமான முறையில் இறந்துவிட அந்த பழியும் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா மீது விழுகிறது. பின்னர் என்ன நடந்தது? அந்த கொலையை யார் செய்தார்கள்? அர்ஜுன் தாஸ் மீது விழுந்த பழியை அவர் துடைத்தாரா? என்பது குறித்த படம்தான் அநீதி. இந்த படம் வெளியாகி தற்போது மக்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படம் மிக நன்றாக இருப்பதாகவும், பணம் வந்தவுடன் மக்கள் எவ்வாறு மாறுகிறார்கள்? அவர்கள் மனநிலையில் எவ்வாறு மாற்றம் ஏற்படுகிறது? அவர்கள் பணம் இல்லாதவர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது குறித்த ஒரு படமாக இது இருப்பதாக பொதுமக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  மகனுடன் கொஞ்சி விளையாடும் நடிகை Amalapaul..! செம்ம கியூட்டான புகைப்படங்கள் இதோ..!

படம் ரொம்ப சூப்பரா இருக்கு.! அர்ஜுன் தாஸின் அநீதி படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! 3

இத்தனை நாட்களாக வில்லனாக நடித்து வந்த அர்ஜுன் தாஸ் தற்போது முதல் முறையாக ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். அவர் தனது முதல் படத்தையே நன்றாக கையாண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது பொதுமக்கள் கூறிவரும் அந்த விமர்சனத்தை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Bingoobox

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment