குக் வித் கோமாளியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரித்திகாவுக்கு கோமாளியாக வரும் புகழ் தற்போது வெங்கடேஷ் பட்டை எதிர்த்து பேசியிருக்கிறார். இதனால் வெங்கடேஷ் பட் கடுப்பாகி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கிறது. இறுதி கட்ட ஷூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது சீசன் 4-ம் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்த சீசனின் வெற்றியாளராக மைம் கோபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ரா, சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண், ஆண்ட்ரியன் என மொத்தம் ஆறு போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதியாகி இருந்தனர். இந்த சுற்றில் தற்போது மைம் கோபி முதலிடத்தையும், சிருஷ்டி இரண்டாவது இடத்தையும், விசித்ரா மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இறுதி சுற்றுக்கு முன்பாக செலிப்ரேஷன் ரவுண்டு என்று சொல்லப்படும் ஒரு சுற்றை தயார் செய்திருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் தற்போது சீசன் 2வில் இருந்து மதுரை முத்து, ஷகிலா, ரித்திகா, தர்ஷா குப்தா, தீபா ஷங்கர் போன்ற பலர் வந்திருக்கின்றனர். அநீதி படக் குழுவில் இருந்து இயக்குனர் வசந்த பாலன், அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயனும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது வருகை புரிந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

மேலும் சீசன் 2 ரித்திகாவுக்கு புகழ் கோமாளியாக இருக்கிறார். ரித்திகா வாழைப்பூ கோலா உருண்டை செய்து இருக்கிறார். அதில் சிக்கன் போட்டீர்களா என்று வெங்கடேஷ் பட் கேட்க எவனாவது சிக்கன் போடுவானா என்று புகழ் கையை நீட்டி பேச வெங்கடேஷ் பட் கடுப்பாகி இருக்கிறார். பின்னர் வழக்கம் போல அதை புகழ் சிரித்து சமாளித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television