யோவ் சும்மா உக்காருய்யா.! நான் கடவுளையே நம்பாத ஆளு.! நீ பெரிய கடவுளா? Thug Life செய்த மாரிமுத்து.!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்துவுக்கும் ஜோசியர் ஒருவருக்கும் இடையே தற்போது தகராறு எழுந்திருக்கிறது. அந்த ஜோசியரை வெளுத்து வாங்கி இருக்கிறார் மாரிமுத்து. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா என்கிற விவாத நிகழ்ச்சியில் தற்போது ஜோதிடத்தை நம்புவார்கள் வெர்சஸ் ஜோதிடத்தை நம்பாத மக்கள், அதைக் கேள்வி கேட்கும் பொதுமக்கள் என்கிற தலைப்பில் தற்போது விவாதம் நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் நடிகர் மாரிமுத்து, ஜோதிடத்தை நம்பாதவர் என்ற மக்களின் பிரதிநிதியாக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்பொழுது இந்த இந்தியா பின்தங்கி இருப்பதற்கு காரணமே இந்த ஜோதிடர்கள் தான். ஜோசியத்தை நம்புவர்களால் தான் இந்த நாடு இப்படி பின்தங்கி இருக்கிறது, இவர்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஜோசியர் ஒருவர், மாரிமுத்துவிற்கு எதிராக வாதங்களை முன்வைத்தார்.மேலும் இன்றைக்கு விடும் ராக்கெட் அனைத்திற்கும் வானவியலின் முன்னோடியாக இந்தியா தான் இருந்தது என்று பேசினார். அப்போது குறிப்பிட்ட மாரிமுத்து 2004 இல் சுனாமி வந்ததையோ 2015ல் வெள்ளம் வந்ததையோ 2020ல் கொரோனா வந்தது எந்த ஜோசியக்காரனும் சொல்லவில்லை. வந்த பிறகு அனைவரும் பேசுவார்கள். மு க ஸ்டாலின் முதல்வராகவே முடியாது என்று இந்தியா முழுவதும் இருக்கும் ஜோசியக்காரர்கள் சொன்னார்கள்.ஆனால் அவர் எப்படி முதல்வரானார் என்று ஜோதிடர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.

விளம்பரம்
தொடர்புடையவை  இதுக்கு கூட லாயக்கு இல்லாத ஆளு நீ.! சக்தியை எல்லார் முன்னாடி வைத்து அசிங்கப்படுத்தும் மாமியார் கஸ்தூரி.!

மேலும் பேசிய மாரிமுத்து ரஜினிகாந்த் பிறந்த சமயத்தில் இந்தியாவில் மட்டும் 57 ஆயிரம் குழந்தை பிறந்தது. அதில் அவர் மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனார்.? ஏனென்றால் அவர் அதற்காக கடுமையாக உழைத்தார். பெங்களூருவிலிருந்து சென்னைக்கு வந்தார். கே பாலச்சந்திரன் வீட்டிற்கு வாய்ப்பு தேடி அலையாய் அலைந்தார். தொடர்ந்து உழைப்பின் மூலமாக என்று சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். உழைக்காத மற்றவர்கள் அனைவரும் ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஜோதிடர் ஒருவர் நான் சொல்வது மட்டும் நடந்தால் நீங்கள் எனக்கு இரண்டு கோடி தர வேண்டும், நடக்கவில்லை என்றால் நான் உங்களுக்கு ரெண்டு கோடி தருகிறேன் என்று ஆவேசமாக எழுந்து மாரிமுத்துவிடம் கைநீட்டி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது குறுக்கிட்ட மாரிமுத்து யோவ் நான் கடவுளையே நம்பாதவன் யா, யார்யா நீங்கெல்லாம், சும்மா உக்காருயா என்று அந்த ஜோதிடரை அடக்கினார். சீரியலில் எப்போதும் பிற்போகத்தனமாகவும் பெண்களை அடிமைப்படுத்தும் விதமாகவும் பேசிக் கொண்டிருக்கும் மாரிமுத்து உண்மையில் தான் ஒரு முற்போக்குவாதி என்றும், தான் இந்த ஜோதிடம் ஜாதகங்களை எல்லாம் துளியும் நம்பாதவன் என்றும் பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கிறார். அதை நிரூபிக்கும் விதமாக தற்போது இந்த பேட்டியில் கலந்து கொண்ட ஜோதிடர்களை லெப்ட் ரைட் வாங்கியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆதி குணசேகரன் இது போன்ற போலி சாமியார்களை வச்சு செய்து விடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..!

விளம்பரம்
தொடர்புடையவை  சீரியலில் இருந்து விலகிய காயத்ரி.? இனி இவருக்கு பதில் இவரா.? எந்த சீரியல்னு தெரியுமா?

Youtube Video Embed Code Credits: ZEE Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment