புது குண்டை போட்ட ஆடிட்டர்.! மாரடைப்பால் சரிந்து விழுந்த ஆதி குணசேகரன்.! தூக்கிக்கொண்டு ஓடும் கதிர்.!

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது புலம்பி புலம்பி ஆதி குணசேகருக்கு நெஞ்சு வலியே வந்து விட்டது. அவரைத் தூக்கி கொண்டு கதிரும் கரிகாலனும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த தொடராக இருந்து வரும் எதிர்நீச்சலில் தற்போது ஜீவானந்தம் ஆதி குணசேகரனின் 40 சதவீத பங்குகளை பறித்துக் கொண்டார். மொத்த சொத்தில் இருக்கும் 40 சதவீத பங்குகளும் ஜீவானந்தத்தின் பெயருக்கு மாற்றப்பட்டு விட்டதால் கதிர், ஞானம் உட்பட அண்ணன் தம்பிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இதை கேட்பதற்காக சென்ற அனைவரையும் ஜீவானந்தத்தின் ஆட்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியில் வீசி விட்டனர். இது அவர்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்துகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புது குண்டை போட்ட ஆடிட்டர்.! மாரடைப்பால் சரிந்து விழுந்த ஆதி குணசேகரன்.! தூக்கிக்கொண்டு ஓடும் கதிர்.! 1

விளம்பரம்

தற்போது ஆடிட்டரின் ஆலோசனையின் பெயரில் வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் ஏவி விட்டு ஜீவானந்தத்தை மனதை மாற்ற முடியும் என்று ஆதி குணசேகரன் கணக்கு போடுகிறார். அந்த வகையில் வீட்டில் உள்ள பெண்களின் மனதை மாற்றுவதற்காக தற்போது சில நாடகங்களை நடத்தி வருகிறார் ஆதி குணசேகரன். அதன்படி நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த அவர், ஜீவானந்தம் தன்னை துப்பாக்கியால் சுடுவது போலவும் தன் மார்பின் மீது ஏறி அமர்ந்து தன்னை சுட்டு தன் தலையெல்லாம் வெடித்து விட்டதாகவும் நாடகமாடுகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் பதறிப் போகின்றனர். இருப்பினும் மருமகள்களுக்கு அவர் மீது சந்தேகம் தான் இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற நாடகங்களை அரங்கேற்றி மருமகள்களின் மனதை மாற்றி ஜீவானந்திடமிருந்து சொத்தை மீட்டு விடலாம் என்று கணக்கு போடுகிறார் ஆதி குணசேகரன்.

தொடர்புடையவை  கர்ப்பமாக இருப்பதை பாக்யாவிடம் போட்டு உடைத்த ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்து போன பாக்யா

புது குண்டை போட்ட ஆடிட்டர்.! மாரடைப்பால் சரிந்து விழுந்த ஆதி குணசேகரன்.! தூக்கிக்கொண்டு ஓடும் கதிர்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் வீட்டில் சண்டை வெடிக்கிறது. அப்போது ஆதி குணசேகரன் தனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது போல சரிந்து விழுகிறார். அவரை தூக்கி கொண்டு கரிகாலனும் கதிரும் ஓடுகின்றனர். அத்துடன் அந்த ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் சொத்திற்காக ஆதி குணசேகரன் இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி வருவதாக கமெண்ட்டுகளில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment