தல அஜித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற போலோ சங்கர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரெய்லரை பார்த்த பலரும், “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க” என்று கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் தல அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் தான் வேதாளம். அந்த திரைப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து இருக்கின்றனர். அஜித்குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், அஸ்வின், தம்பி ராமையா, மன்சூர் அலிகான், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் தான் வேதாளம். 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை 8 வருடங்கள் கழித்து தற்போது தெலுங்கில் போலோ சங்கர் என்கிற பெயரில் உருவாக்கி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெஹர் ரமேஷ் இயக்கி வருகிறார். பில்லா, சக்தி, ஷேடா போன்ற படங்களை இயக்கியவர் மெஹர் ரமேஷ். இவர் தற்போது முதல் முறையாக சிரஞ்சீவியை வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ராமபிரம்மம் சிங்காரா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த 2021 ஆம் ஆண்டே வெளியானது. மேலும் இந்த மோஷன் டீசரை நடிகர் மகேஷ்பாபு சிரஞ்சீவியின் பிறந்த நாள் அன்று வெளியிட்டு இருந்தார். இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னாவும், தங்கையாக நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி டாக்ஸி டிரைவராக மாறிய கேங்ஸ்டராக நடிக்கிறார். மணி ஷர்மாவின் மகன் மஹதி ஸ்வரசாகர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் தற்போது படத்தில் இருந்து ட்ரைலர் வெளியாகியிருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ‘மெகா பொழுதுபோக்கு அதிரடிக்கு தயாராகுங்கள்” என்று படக் குழுவினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகியிருக்கிறது. இந்த ட்ரைலரை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் “அடேய் படத்த என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” என்று வழக்கம் போல கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: AK Entertainments