அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கி நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வெப். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. அறிமுக இயக்குனர் ஹாரூன், நட்டி நடராஜை கதாநாயகனாக வைத்து வெப் என்கிற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜுக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார். மேலும் மொட்ட ராஜேந்திரன், சாஷ்வி பாலா, சுபப்ரியா, அனன்யா மணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். வேலன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் வைத்து நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்தவர் நட்டி நடராஜ். இவருக்கு சதுரங்க வேட்டை திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் நம்ம வீட்டு பிள்ளை, காட்ஃபாதர், வால்டர், கர்ணன், பகாசூரன் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில் அவர் வெப் என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக முதல் முறையாக களமிறங்கி இருக்கிறார். இந்தப் படம் குறித்து பேசிய நட்டி நடராஜ் இயக்குனர் ஹாரூன் இதுவரை எந்த படத்திலும் உதவி இயக்குனராக கூட பணியாற்றவில்லை, ஆனால் இந்த படத்தின் முதல் காட்சியை எடுக்கும் பொழுது ஹாரூண் வேலை தெரிந்தவர் என்பது தெரிந்து விட்டது.

இப்போதைய சூழலில் பல இளைஞர்கள் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள். ஆனால் அதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பது குறித்த படம்தான் இந்த வெப் என்று நட்டி நடராஜ் பேசினார். இந்தப் படத்தின் ட்ரைலரை பார்க்கும் பொழுது மன அழுத்தத்தை குறைப்பதற்காக பார்ட்டி, மது என்று இருக்கும் பெண்களை கடத்தி ஹீரோவாக இருக்கும் நட்டி நடராஜ் சைக்கோவாக மாறி சில கொலைகளை செய்வதாக தெரிகிறது. அந்த ட்ரைலரை நீங்களும் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: MRT Music