தாய் தந்தையின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த KPY பாலா.! வீடியோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான பாலா தற்போது தனது பெற்றோர்களுக்கு 60 வது திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் பாலாவிற்கு தற்போது தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சினிமாத் துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்து தற்போது சாதனையாளராக விளங்கிக் கொண்டிருப்பவர் பாலா. இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது என்னமோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாய் தந்தையின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த KPY பாலா.! வீடியோ இதோ.! 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் டைமிங் காமெடிகளும், அடுத்தவர்களை மனம் நோகாமல் கலாய்க்கும் இவரது பாங்கும் பலருக்கும் பிடித்துப் போய் இருந்தது. எனவே பாலாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது. நடிப்பை தாண்டி பாலாவை பொறுத்தவரை மனிதநேயம் உள்ளவர். அவர் தற்போது பல மாணவர்களை தனது வருமானத்தின் மூலமாக படிக்க வைக்கிறார். அதேபோல முதியவர்களுக்காக இல்லம் ஒன்றை ஏற்படுத்தி அதையும் அவரை கவனித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் கூட ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி அறந்தாங்கி மற்றும் அதன் சுற்றி இருக்கும் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்காக அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார் பாலா. இப்படி பலரின் மனம் கவர்ந்தவராக இருப்போம் பாலா தற்போது தனது தாய் தந்தையருக்கு அறுபதாம் கல்யாணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

தொடர்புடையவை  என்னால முடியல.! எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.! Biggboss-க்கு பிறகு முதல் பதிவை பதிவிட்ட ஜனனி.!

தாய் தந்தையின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த KPY பாலா.! வீடியோ இதோ.! 3

விளம்பரம்

அந்த வீடியோவை தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த அவர்பாலா ஜெகநாதன் மற்றும் பூங்குழலின் அறுபதாம் கல்யாணம் என்று அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். நல்ல மகனாக இருந்து தனது தாய் தந்தையருக்கு சிறப்பு செய்துள்ள பாலாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment