தனத்துக்காக மூர்த்தியிடம் பொய் மேல் பொய் சொல்லும் மீனா.! என்ன முடிவு எடுக்க போகிறார் மூர்த்தி.?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தனத்தின் கேன்சர் சிகிச்சைக்காக அவரை திருச்சி வரை அழைத்துச் செல்ல மீனா மற்றும் முல்லை இருவரும் திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி அவரை அழைத்துச் செல்ல திட்டமிடுகின்றனர். அதற்காக மீனா மற்றும் முல்லை இருவரும் இணைந்து தற்போது வீட்டில் பொய் ஒன்றை கூறிக் கொண்டிருக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது தனம் இரண்டாவது முறையாக குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்து விரைவாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்து விட்டனர். மூர்த்தி மற்றும் தனத்திற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனத்துக்காக மூர்த்தியிடம் பொய் மேல் பொய் சொல்லும் மீனா.! என்ன முடிவு எடுக்க போகிறார் மூர்த்தி.? 1

விளம்பரம்

இந்த நிலையில் தனத்திற்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனால் தனத்தை திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மீனா மற்றும் முல்லை இருவரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் வீட்டில் எப்படி பொய் சொல்லி விட்டு செல்வது என்று தெரியாமல் மூவரும் முழித்துக் கொண்டிருக்கின்றனர். முல்லைக்கு திருச்சியில் பரிட்சை என்று மீனா பொய் கூறுகிறார். அப்போது குறுக்கிடும் கதிர் முல்லை மீனா இருவரையும் நான் அழைத்து செல்கிறேன் என்று கூறுகிறார். கதிர் வந்தால் மீனாவிற்கு ஒரு மாதிரியாக இருக்கும் என்று முல்லை கூறுகிறார். பின்னர் தனம் பேசாமல் மீனா மற்றும் முல்லையுடன் நான் சென்று வரவா என்று கேட்கிறார்.

தொடர்புடையவை  பிக்பாஸ் 6ல் போட்டியாளர் ஆகிறாரா அர்ச்சனா? விலகலுக்கு இதுதான் காரணமா? தீயாக பரவும் தகவல்

தனத்துக்காக மூர்த்தியிடம் பொய் மேல் பொய் சொல்லும் மீனா.! என்ன முடிவு எடுக்க போகிறார் மூர்த்தி.? 3

விளம்பரம்

ஜீவாவும் கதிரும் சென்று விட்டால் சூப்பர் மார்க்கெட்டையும் ஹோட்டலையும் யார் கவனித்துக் கொள்வார்கள் எனவே நான் முல்லை மற்றும் மீனாவுடன் சென்று வருகிறேன் என்று தனம் கூறுகிறார். இதற்கு மூர்த்தி சம்மதிப்பாரா? அடுத்து என்ன நடக்கப்போகிறது? தனத்தை அழைத்துச் சென்று சிகிச்சையை முடித்துவிட்டு வருவார்களா? என்பதெல்லாம் தெரியவில்லை. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment