கோலங்கள் சீரியல் வில்லனை மீண்டும் எதிர்நீச்சலில் களம் இறக்கிய திருச்செல்வம்.! புது ப்ரோமோ இதோ.!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது இயக்குனர் திருச்செல்வம் தனது முதல் நாடகமான கோலங்கள் சீரியலில் வில்லனாக நடித்த நடிகர் ஒருவரை களம் இறக்கி இருக்கிறார். இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை அதிகரித்திருக்கிறது. தற்போது அந்த ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. குடும்பத்தில் ஆணாதிக்க மனப்பான்மையில் இருக்கும் ஆண்களுக்கு அடங்கிப் போகும் பெண்களுக்கு எதிராக புரட்சிகரமான ஒரு சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல். திருச்செல்வம் இந்த நாடகத்தை இயக்க கனிகா, மாரிமுத்து, கமலேஷ், பிரியதர்ஷினி, விபுராமன், ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, சத்யப் பிரியா, பாம்பே ஞானம் உள்ளிட்டோர் இந்த நாடகத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலின் கதைப்படி அப்பத்தாவின் 40% பங்குகளை ஜீவானந்தம் திருடிக் கொண்டதால் குணசேகரன் மிகுந்த கோபத்தில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோலங்கள் சீரியல் வில்லனை மீண்டும் எதிர்நீச்சலில் களம் இறக்கிய திருச்செல்வம்.! புது ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

தற்போது ஜீவானந்தத்தின் கதையை முடிக்க முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஒருவரின் உதவியை நாடி குணசேகரன் சென்று இருப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்றைக்கு வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கடற்கரையில் அமர்ந்து கொண்டு குணசேகரன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். வளவன் என்ற தனது முன்னாள் நண்பரின் உதவியை நாடி இருக்கிறார். அவரைக் கொண்டு ஜீவானந்தத்தின் கதையை முடிக்க குணசேகரன் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இன்னொரு பக்கம் ஜீவானந்தத்தை பற்றி தெரிந்து கொள்ள ஜனனியும் சக்தியும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குணசேகரன் சந்திக்க செல்லும் ஓய்வு பெற்ற போலீஸ் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடையவை  நிலா பாப்பா உன் அப்பா நான் தான் டா.! உண்மைகளை தெரிந்துகொன்டு கதறி அழும் கணேஷ்.!

கோலங்கள் சீரியல் வில்லனை மீண்டும் எதிர்நீச்சலில் களம் இறக்கிய திருச்செல்வம்.! புது ப்ரோமோ இதோ.! 3
அவர் வேறு யாரும் இல்லை. கோலங்கள் சீரியலில் தில்லா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான். எதிர்நீச்சல் சீரியலிலும் அவர் ரக்கட் போலீசாகவே நடிக்க இருக்கிறார். திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலில் இவருடைய பாடி லாங்குவேஜ், வசனம், இவர் செய்த வில்லத்தனங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின்னர் எந்த சீரியலும் கிடைக்காமல் இருந்து வந்த அவருக்கு நீண்ட இடைவெளிக்கு பின்னர் எதிர்நீச்சல் சீரியலில் இயக்குனர் திருச்செல்வம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தில்லா இஸ் பேக் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment