18 வருடங்களுக்கு பிறகு ராதிகா இயக்க உள்ள புது நடத்தில் நடிக்க வரும் சந்திரமுகி பொம்மி.!

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரங்களாக தங்களது வாழ்க்கை தொடங்கி பின்னர் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்த பலரை கூறிக் கொண்டே போகலாம். நடிகை ஹன்சிகாஸ்ரீதேவி, நடிகர் சிம்பு, விஷால், ஜெயம் ரவி, மாஸ்டர் மகேந்திரன், அஜித் மனைவி ஷாலினி அவரது தங்கை ஷாமிலி என்று குழந்தை நட்சத்திரங்களாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர்கள் பின்னாளில் மிகப்பெரிய நடிகர்களாக உருவெடுத்தனர். அந்த வகையில் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பலரின் மனங்களை கொள்ளை கொண்டவர்தான் பேபி பிரகதிர்க்ஷா. இவர் தற்போது மீண்டும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் நடிகையாக ஜொலிக்க இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தில் பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை பிரகதிர்ஷா.

18 வருடங்களுக்கு பிறகு ராதிகா இயக்க உள்ள புது நடத்தில் நடிக்க வரும் சந்திரமுகி பொம்மி.! 1

விளம்பரம்

இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தையே இருக்கும் நிலையில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். சந்திரமுகி, வேலன், ராஜராஜேஸ்வரி, வாணி ராணி போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தவர் பிரகதிர்ஷா. இதில் வேலன் நாடகத்தில் முருகராகவும், ராஜராஜேஸ்வரி நாடகத்தில் அம்மனாகவும் நடித்து அசத்தியிருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் மிக ஃபேவரைட்டான இந்த இரண்டு சீரியல்களில் நடித்த இவர் சில காலமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். திருமணம் ஆகி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செட்டில் ஆகி இருந்த அவர் தற்போது மீண்டும் ராதிகா சரத்குமார் இயக்கும் புது நாடகம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தூர்தர்ஷன் பொதிகையில் “தாயம்மா” என்கிற சீரியல் ஒன்றை இயக்க இருக்கிறார். அந்த சீரியலில் ராதிகாவுடன் இணைந்து கௌரி என்கிற கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் பிரகதிர்ஷா.

தொடர்புடையவை  கணவர் இழப்பிலிருந்து மீள முடியாமல் காட்டுக்குள் சென்ற ஸ்ருதி ஷண்முகப்ரியா.! வெளியான வீடியோ.!

18 வருடங்களுக்கு பிறகு ராதிகா இயக்க உள்ள புது நடத்தில் நடிக்க வரும் சந்திரமுகி பொம்மி.! 3

விளம்பரம்

இந்த செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் நடிகை பிரகதிர்ஷா, “கௌரி என்கிற கதாபாத்திரத்தின் மூலமாக
உங்கள் அனைவரையும் விரைவில் சின்னத்திரையில் சந்திக்க இருக்கிறேன். இந்தப் புதிய ப்ராஜெக்ட் ஆனது எனது இதயத்திற்கு மிக நெருக்கமானது, நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான் மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறேன். என்னுடைய சிறு வயதிலிருந்தே எனக்கு அங்கீகாரத்தை வழங்கியதற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன், அதே நேரம் மகிழ்ச்சியாகவும், சற்று பதட்டமாகவும் இருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவிற்கு கீழே பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் மீண்டும் உங்களை திரையில் காண ஆவலாக இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர்..!

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment