நடிகர் அதர்வா மற்றும் குட் நைட் பட நடிகர் மணிகண்டன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் மத்தகம். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அதர்வா போலீஸ் அதிகாரியாகவும் அவருக்கு எதிராக வில்லனாக மணிகண்டனும் நடித்து அசத்தியிருக்கின்றனர். ட்ரைலர் செம மாஸாக தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகர்களாக இருந்து வருபவர்கள் தான் அதர்வா மற்றும் மணிகண்டன். இவர்கள் இருவரும் நடித்த படங்களுமே மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக மணிகண்டன் ஜெய் பீம் மற்றும் குட்நைட் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதேபோல நடிகர் அதர்வாவும் பரதேசி, சண்டிவீரன், இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம், ட்ரிகர் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கின்றனர். இந்த தொடரில் நடிகை நிகிலா விமல் நடித்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி என்று பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஓடிடி தளமான hotstar தளத்தில் வருகிற 18-ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன், இளவரசு, நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்க, ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. எட்வின் சாக்கே ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

30 மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையமாக வைத்து இந்த தொடர் உருவாகியிருக்கிறது. ஒரு நீளமான இரவில் கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் கதையை மையமாக வைத்து டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் அதர்வா போலீஸாகவும் நடிகர் மணிகண்டன் கேங்ஸ்டராகவும் நடித்து அசத்தியிருக்கின்றனர். டீசர் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் தற்போது ட்ரைலரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Disney Hotstar Tamil