சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஈஸ்வரியின் தந்தையை கரிகாலன் திட்டி தீர்க்கிறார். மேலும் கதிரை வைத்து குணசேகரன் மிகப்பெரிய பிளான் ஒன்றையும் போடுகிறார். அப்படி ஒரு ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. குணசேகரன் எப்படியாவது தனது சொத்தை மீட்டு விட வேண்டும் என்பதற்காக காவல் துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வளவன் என்கிற போலிஸ் அதிகாரியை சென்று சந்திக்கிறார். மேலும் வளவனோ உங்களது தம்பியும் என்னுடன் இருந்தால் தனது இந்த விஷயம் ஈசியாக முடிந்துவிடும் என்று சொல்லி குணசேகரனை அனுப்பி வைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிலைமை ஒரு புறம் இப்படி இருக்க வீட்டிலோ ஆதிரை மற்றும் கரிகாலனின் பிரச்சனை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. கரிகாலனை கணவனாக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறிக் கொண்டிருந்த ஆதிரையின் கன்னத்தில் விசாலாட்சி ஓங்கி ஒரு அறை விட்டு இனி கரிகாலன் தான் உன் கணவன் அவன்தான் இனி நம் வீட்டு மாப்பிள்ளை அவனுடன் சேர்ந்து வாழும் வழியை பார் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பிரச்சனை இப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வீட்டிற்கு வரும் ஈஸ்வரியின் தந்தை ஆதிரையிடம் எப்படி இருக்கிறாய் என்று கேட்கிறார். மேலும் இந்த வீட்டில் இருந்தால் எப்படி நன்றாக இருப்பாய் என்று அவரை கூறுகிறார்.

அப்போது குறிக்கிடும் கரிகாலன், போனது என் வாழ்க்கை நீ என்னையா பேசிக்கிட்டு இருக்க என்று சொல்லி அவரை திட்டுகிறார். இதனால் ரேணுகாவும் ஆதிரையும் என்ன செய்வது என்றால் தெரியாமல் முழிக்கின்றனர். மறுபுறம் குணசேகரன் கதிரிடம் வளவனை முன்னால் விட்டு நீ பின்னால் இருந்து கொள், எந்த இடத்திலும் உன் பெயர் அடிபட்டு விடக்கூடாது, உன்னுடைய நல்லதற்காக சொல்கிறேன் என்று சொல்லி அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV