சீரியலுக்காக நாள் முழுவதும் ஐஸ் கட்டியில் நின்ற சைத்ரா.! வைரலாகும் வீடியோ இதோ.!

கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது சீரியலுக்காக தனது உயிரை பணயம் வைத்து இருக்கிறார். அதை வீடியோவாக எடுத்து தற்போது வெளியிட்டு இருக்கிறார். இதை யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் என்றும் அவர் பதிவிட்டு இருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி, தற்போது கயல் சீரியல் மூலமாக பலரின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் நடித்து அசத்தி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கயல் சீரியலில் அவருக்கும் எழிலுக்கும் திருமணமாகுமா? என்கிற பரபரப்புடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சீரியலுக்காக நாள் முழுவதும் ஐஸ் கட்டியில் நின்ற சைத்ரா.! வைரலாகும் வீடியோ இதோ.! 1

விளம்பரம்

இந்த சீரியலில் தற்போது எழிலின் தாயார் சிவசங்கரி கயலை கடத்தி அவரை கொலை செய்து விடுமாறு கௌதமுக்கு உத்தரவிடுகிறார். அதே போல கௌதமும் கயலை கடத்தி அவரை அந்தரத்தில் கயிற்றில் கட்டி தொங்க விடுகிறார். மேலும் கயலின் காலுக்கு கீழே ஐஸ்கட்டியை வைத்திருந்து கொலை செய்வது போலவும் திட்டம் தீட்டி இருந்தார். ஆனால் அதற்குள்ளாக எழில் வந்து கயலை காப்பாற்றி விட்டதாக கதை நகர்ந்திருந்தது. இந்த நிலையில் அந்த சீன் எப்படி எடுக்கப்பட்டது என்பதை விளக்கி சைத்ரா ரெட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “இந்த அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது_ ஒரு ஐஸ்கட்டியின் மேலே முழு நாளும் நின்று கொண்டும், பின்னால் சிறிது இடைவெளி எடுத்தும் இருந்தேன், என்னை கவனத்துடன் வழிநடத்திய என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடையவை  ராகினியுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்த நிவின்.! கதறி அழும் காவேரி.! மகாநதி ப்ரோமோ..!

சீரியலுக்காக நாள் முழுவதும் ஐஸ் கட்டியில் நின்ற சைத்ரா.! வைரலாகும் வீடியோ இதோ.! 3
இந்த காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் கடின உழைப்பை வழங்கினர் என்றும், இயக்குனர் செல்வத்திற்கு தனது நன்றிகள் மற்றும் கேமராமேன் ஜோன்ஸ் ஆனந்துக்கும் நன்றிகள் என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் இதை வீட்டில் யாரும் செய்து பார்க்க வேண்டாம் நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் இந்த காட்சியை எடுத்தோம் என்றும் அவர் தனது பதிவில் கூறி இருக்கிறார். நீங்களும் அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment