ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் கூறிய ரசிகரை தற்போது ரஜினி ரசிகர்கள் இணைந்து அடித்த துவைத்து இருக்கின்றர். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று தமிழக முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாரின் 169 ஆவது திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இல்லை என்று சொன்ன விஜய் ரசிகர் ஒருவரை ரஜினி ரசிகர்கள் அடித்து துவைத்திருக்கும் சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போட்டியை நிலவி வருகிறது. வாரிசு ஆடியோ லாஞ்சில் பேசிய நடிகர் சரத்குமார் விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினார். அன்று தொடங்கி இன்று வரை இந்த பிரச்சனை நீண்டு கொண்டே வருகிறது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் சரத்குமாரின் அந்த பேச்சை ரசிக்கவில்லை. தொடர்ந்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களிலும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதையடுத்து ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் என்றைக்குமே சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்டதில்லை என்று வெளிப்படையாக பேசி இருந்தார். மேலும் பருந்து என்றைக்கும் உயர பறந்து கொண்டே இருக்கும். அதை பார்க்கும் காகமும் உயர பறக்க வேண்டும் என்று நினைக்கும். ஆனால் பருந்து எந்தவித சலனமும் இல்லாமல் இறக்கைகளை கூட ஆட்டாமல் உயர பறந்து கொண்டே இருக்கும் என்று குட்டி கதையை கூறியிருந்தார்.
#Rajinikanth fans attack a Vijay fan at theatre premise for saying #Jailer is not good.
What a shame!! Don't encourage violence 🤦♂ #JailerFDFS #JailerReview pic.twitter.com/gFk8bJ2nJW
— Films Spicy (@Films_Spicy) August 10, 2023
Rajinikanth oda kaakka Katha enga kondu vanthu vitrukku pathingala makkale… https://t.co/Xctd8OQVEx
— Priya Thangavel (@priya_0706) August 10, 2023
Thank God Rajinikanth did not enter politics relying on this Uncivilised uncultured brutes.
Idhu perumayada Mentalaan Tharkuris?
ThalapathyVijay Ajith, Suriya fans kooda ippidi keela tharama nadanthu kolla maatanga.
Strict action should be taken on this Psycho groups https://t.co/AtqeQN4pxU
— Ayaas (@Ayaas101) August 10, 2023
இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் தன்னை பருந்துடனும் விஜயை காகத்துடனும் ஒப்பிட்டு தான் தலைவர் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர். தற்போது சர்ச்சைகள் எல்லாம் ஓரளவிற்கு ஓய்ந்து படம் என்று உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் படம் பார்த்த விஜய் ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என்று கருத்து தெரிவித்தார். அதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்கள் அவரை துவைத்து எடுத்து விட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Polimer News