நடிகை மீனா தற்போது ஜெயிலர் படத்தில் வரும் காவலா பாட்டுக்கு க்யூட்டாக நடனமாடி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. காவாலா பாடலுக்கு ரீல்ஸ் செய்யாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பலரும் ரீல்ஸ் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை மீனாவும் தற்போது அதை ஒரு வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மீனா. இவர் தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் மீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பின் காரணமாக மறைந்திருந்தார். அவருக்கு கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பிரச்சனையும் இருந்ததால் பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். இது திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு தற்போது மீனா கொஞ்சம் கொஞ்சமாக கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். அவரை அவரது தோழிகள் சங்கவி, மகேஸ்வரி, கலா மாஸ்டர், சினேகா போன்றவர்கள் தேற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்வதற்காக விழா ஒன்றையும் நடத்தி இருந்தனர்.

சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது சில புகைப்படங்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவரின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமான காவலா பாடலுக்கு கியூட்டான எக்ஸ்பிரஷனை கொடுத்து வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O