இலங்கை சிறுமி பாடிய உருக்கமான பாடல்.! மனம் உடைந்து அழுத ஒட்டு மொத்த அரங்கம்.!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் தற்போது நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த போட்டியாளராக இருக்கும் கில்மிஷா தற்போது தனது போரில் இறந்த மாமாவை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டிருக்கிறார். அவருக்காக தற்போது கண்டா வரச் சொல்லுங்கள் என்கிற பாடலை பாடினார். இதை கேட்ட நடுவர்கள் பலரும் கண்கலங்கி அழுதிருக்கின்றனர். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழர்கள் யாராலும் மறக்க முடியாது. அந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு இன்றளவும் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர்கள் தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுப்பது வழக்கமாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சிறுமி பாடிய உருக்கமான பாடல்.! மனம் உடைந்து அழுத ஒட்டு மொத்த அரங்கம்.! 1

விளம்பரம்

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஜனனி லாஸ்லியா உள்ளிட்டவர்கள் பங்கெடுத்து வரும் நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியிலும் கில்மிஷா மற்றும் அசாணி என்கிற இரண்டு குழந்தைகள் பாடி வருகின்றனர். இவர்கள் பாடும் பாடல் எப்போதும் மனதை உருக்கும் விதமாகத்தான் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையில் தனது மாமாவை இழந்துவிட்டதாக சொல்லி கில்மிஷா பாடிய பாடல் நடுவர்கள் உட்பட அனைவரையும் கண்கலங்கி அழ வைத்திருக்கிறது. கில்மிஷாவின் தாயார் பேசும் பொழுது குடும்பத்தில் இருந்து ஒருவரை முள்ளிவாய்க்கால் போருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் தன்னுடைய தம்பி திரும்பி வரவே இல்லை என்று சொல்லி மனம் உடைந்து அழுகிறார். அந்த வீடியோவை பார்த்த பலருக்கும் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடையவை  "என் வீட்டு சாவியை குடுயா".! கோபி வீட்டிற்கே சென்று கதறவிட்ட பாக்யா.! தரமான செய்கை.!

இலங்கை சிறுமி பாடிய உருக்கமான பாடல்.! மனம் உடைந்து அழுத ஒட்டு மொத்த அரங்கம்.! 3
மேலும் நடுவர்களாக இருக்கும் ஸ்ரீநிவாஸ், சைந்தவி, சிறப்பு விருந்தினராக வந்த சினேகன் உட்பட அனைவரும் கண்கலங்கி அழுது இருக்கின்றனர்.அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது் நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment