உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்க போறேன் – ரஜினி அறிவிப்பு.!

ஜெயிலர் திரைப்படத்தை உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து பார்க்க இருப்பதாக தற்போது ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 169வது திரைப்படமாக உருவாகி இருக்கிறது ஜெயிலர் திரைப்படம். நெல்சன் இயக்கத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, சுனில், ரெட்டின் கிங்ஸ்லி போன்ற பலரது நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ஏழு நாட்களில் 375.40 கோடி வசூலைக் குவித்தி சாதனை நிகழ்த்தி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்க போறேன் - ரஜினி அறிவிப்பு.! 1

விளம்பரம்

இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் 7 நாட்களில் இந்த சாதனையை செய்யவில்லை. விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற மிகப்பெரிய படங்களின் மொத்த வரவே 500 கோடி என்று இருந்த நிலையில் வெறும் ஏழே நாட்களில் 375 கோடியை அள்ளி சாதனை படைத்திருந்தது ஜெயிலர் திரைப்படம். இந்த திரைப்படத்தின் வெற்றியை தற்போது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். படம் வெளியாகும் முதல் நாளே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலைக்கு கிளம்பி சென்று இருக்கிறார். உடல்நிலை பாதிப்பு, கொரோனா பெருந்தொற்று போன்ற காரணங்களால் சில வருடங்களாக இமயமலை பயணத்தை தவிர்த்து இருந்த ரஜினிகாந்த் தற்போது இமய மலைக்கு பயணம் செய்திருக்கிறார்.

தொடர்புடையவை  மகளுடன் முதல் போட்டோஷூட் எடுத்த சீரியல் நடிகை ரித்திகா..!

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஜெயிலர் படம் பார்க்க போறேன் - ரஜினி அறிவிப்பு.! 3

விளம்பரம்

அங்கு சில ஆசிரமங்கள் மற்றும் தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். சமீபத்தில் கூட தமிழகத்தில் இருந்து ஜார்கண்ட்க்கு ஆளுநராக சென்ற சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் விரைவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். அந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Thanthi TV

விளம்பரம்

Leave a Comment