நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகளை பார்த்த பின்னர் ரசிகர்கள் இதை போய் நீக்கி விட்டீர்களே என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சின்னத்திரை காமெடி மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். சிம்பு நடித்த மன்மதன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான இவர், பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் காமெடியில் இருந்து ஹீரோவாக ரூட்டை திருப்பிய அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம்தான் தில்லுக்கு துட்டு. அதன் மூன்றாவது பாகமான டிடி ரிட்டன்ஸ் என்கிற படத்தில நடித்து முடித்து இருந்தார் சந்தானம். இந்த படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரேம் ஆனந்த் இயக்கிய இந்த படத்தில் நடிகை சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், முனீஷ் காந்த், பெப்சி விஜயன், தீபா என பல நடிகர்கள் நடித்திருந்தனர். ரோகித் ஆபிரகாம் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பதாகவும், சந்தானம் ரிட்டன்ஸ் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த படம் 30 கோடி வரை வசூல் செய்வதால் செய்திருந்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த சந்தானத்திற்கு இந்த படம் ஒரு கம்பேக்காக அமைந்திருந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் ஒரு கடைக்குச் செல்லும் ராஜேந்திரன், டைகர் தங்கதுரை மற்றும் அவரது ஆட்கள் செய்யும் காமெடியை வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை எதற்கு படத்தில் இருந்து நீக்கினீர்கள்? நன்றாக இருக்கிறது என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Moviebuff Tamil