சந்திரமுகி 2 படத்தில் இருந்து தற்போதைய இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “மோருணியே” என்கிற தொடங்கும் அந்த பாடலை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது சந்திரமுகி திரைப்படம். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் வாசுவே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் வேட்டையனாக நடிக்க சந்திரமுகியாக நடிகை கங்கணா ராவத் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு திரையில் வெளியாக இருக்கிறது.மேலும் படம் முடிவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக் குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலாக ஸ்வாகதாஞ்சலி என்கிற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு நிலையில் தற்போது இரண்டாவது பாடலான “மோருணியே” என்கிற பாடல் வெளியாகியிருக்கிறது. லாரன்ஸின் துள்ளலான நடந்தத்துடன் கலக்கலாக இந்த பாடல் வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sony Music South