நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் மரியாதை செலுத்தியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனது தம்பியின் உடலுக்கு அருகில் சோகத்துடன் வடிவேலு நின்று கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகின் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் தாயார் கடந்த ஜனவரி மாதம் காலமாகி இருந்த நிலையில் அடுத்தபடியாக தனது தம்பி ஜெகதீஸ்வரனை இழந்திருக்கிறார். கல்லீரல் பிரச்சனையால் பல நாட்களாக அவதிப்பட்டு வந்த ஜெகதீஸ்வரன் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் வடிவேலு இன்று மதுரை விரைந்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது அண்ணன் போலவே திரைத்துறையில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் ஜெகதீஸ்வரன் சில படங்களில் நடித்திருக்கிறார். மலைக்கோயில் தீபம், காதல் அழிவதில்லை போன்ற சில படங்களில் நடித்த அவர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் மீண்டும் மதுரைக்கு திரும்பியிருந்தார். பின்னர் துணி வியாபாரம் செய்து வந்த ஜெகதீஸ்வரனுக்கு கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் தனது வீட்டில் காலமாகி இருக்கிறார். மறைந்த ஜெகதீஸ்வரனுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

தனது தம்பியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் வடிவேலு சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஜெகதீஸ்வரன் உடனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வடிவேலு இல்லத்திற்கு சென்றார். அப்போது வடிவேலு கவலை தோய்ந்த முகத்துடன் தனது தம்பியின் உடல் அருகில் நின்று கொண்டிருந்தார். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Kalaignar Seithigal