கெளதம் ஏமாற்றிய பெண்களின் பட்டியலை வாசித்த மஹா.! பீதியில் உறைந்து போன கெளதம்.!

ஆஹா கல்யாணம் சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கௌதம் காதல் என்கிற பெயரில் பல பெண்களை ஏமாற்றியதை மகா கண்டுபிடித்து கௌதமிடம் ஒவ்வொரு பெயராக கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் கௌதம் பீதியில் உறைந்து போயிருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஆகா கல்யாணம் சீரியல் பல பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஹீரோ சூர்யாவின் தம்பி கௌதம் மாட்டுவானா? இல்லையா? என்பதுதான். சூர்யாவிற்கு பார்த்த ஐஸ்வர்யாவை கௌதம் கடத்திக் கொண்டு சென்று விடுகிறான். இதனால் சூர்யா ஐஸ்வர்யாவின் தங்கை மகாவை திருமணம் செய்து கொள்கிறான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கெளதம் ஏமாற்றிய பெண்களின் பட்டியலை வாசித்த மஹா.! பீதியில் உறைந்து போன கெளதம்.! 1

விளம்பரம்

ஐஸ்வர்யாவை பணக்காரி என்று எண்ணிக்கொண்டு அவரை கௌதம் கடத்தி விடுகிறான் மேலும் சூர்யாவை அவமானப்படுத்துவதும் கௌதமின் திட்டமாக இருக்கிறது. ஆனால் இது குறித்து சூர்யாவிற்கு எந்த விஷயமும் தெரியாது, மகா இதை கண்டுபிடித்து விடுகிறார். தனது கணவரிடம் கௌதம்தான் ஐஸ்வர்யாவை கடத்தி உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தினான் என்ற உண்மையை விரைவில் நிரூபிப்பேன் என்று சொல்லி சபதம் எடுத்திருக்கிறார் மகா. இதற்காக அவர் பலகட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஆனால் எதுவும் பலன் இல்லாமல் போகிறது.

தொடர்புடையவை  நீங்க நக்கி பாக்கும்போதே தெரியும் அது லக்னோன்னு..! குக் வித் கோமாளி ப்ரோமோ இதோ..!

கெளதம் ஏமாற்றிய பெண்களின் பட்டியலை வாசித்த மஹா.! பீதியில் உறைந்து போன கெளதம்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மகாவிடம் உன்னால் எந்த ஆதாரத்தையும் உன்னால் சேமிக்க முடியாது என்று கௌதம் சவால் விடுகிறான். அப்போது பிரியா, ரம்யா, ராகவி, பமீலா, ஸ்வேதா என உன்னால் ஏமாற்றப்பட்டவர்களை ஒட்டுமொத்தமாக அழைத்து வந்து இந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தி காட்டுகிறேன் என்று சவால் விட்டு மகா கிளம்பி செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment