சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவை பிரிய மனமில்லாத முத்துவும் மீனாவின் வீட்டிற்கு கிளம்பி சென்று விடுகிறார். அங்கு மீனாவும் முத்துவுக்கு மீன் குழம்பு வைத்து பலமாக கவனிக்கிறார். இதை மீனாவின் தாயார் மற்றும் தம்பி தங்கைகள் அனைவரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தனது அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணை விதி வசத்தால் திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் அவருடன் வாழ பிடிக்காமல் இருந்த முத்துவுக்கு பின்னர் தனது மனைவி மீது மிகவும் பரிவு வருகிறது. தன் மனைவியை புரிந்து கொள்ளும் அவர் அவருடன் சேர்ந்து வாழத் தொடங்குகிறார். தற்போது கதைப்படி ஆடி மாதம் என்பதால் மீனாவை அவரது தாயார் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

முத்துவின் தாயார் விஜயா மீனாவின் தாயாருக்கு போன் செய்து உங்கள் மகளை அழைத்துக் கொண்டு செல்லுமாறு கூறுகிறார். ஆனால் மீனாவை பிரிந்து முத்துவால் இருக்க முடியவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மீனாவுக்கு போன் செய்து பசிக்கிறது சாப்பிட ஏதாவது இருக்கிறதா என்று முத்து கேட்கிறார். நீங்கள் உடனே கிளம்பி வாங்க என்று சொல்லி மீனா முத்துவுக்காக மீன் குழம்பு செய்து பரிமாறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television