சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் நெல்சனுக்கு செக்குகளையும் பிஎம்டபிள்யூ மற்றும் போர்சே ரக காரையும் பரிசாக வழங்கினார். அந்த வீடியோக்கள் நேற்றும் முதல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. சன் தொலைக்காட்சி நிறுவனமே தனது youtube பக்கத்தில் அந்த வீடியோக்களை பகிர்ந்து இருந்தது.

இந்த நிலையில் அந்தப் படத்தில் காவலா பாடலுக்கு ஆடிய தமன்னாவும், இசையமைத்ர அனிருத்தும் தங்களுக்கு எதுவும் இல்லையா என்று கேட்பது போல மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் ரெண்டாகிவருகின்றது. ஜெயிலர் படத்திற்கு முகம் கொடுத்ததே காவாலா பாடல் தான். முதல் சிங்கள் பாடலாக வெளியான இந்த பாடல் தான் ஜெயிலர் படத்திற்கு தூணாக இருந்தது. இந்தப் பாடலில் ஆடிய தமன்னாவும் பாடலும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் ஆயினர். இந்த நிலையில் ரஜினி மற்றும் நெல்சனுக்கு கார் வழங்கிய கலாநிதி மாறனிடம் தமன்னாவுக்கு எப்போது கார் பரிசு தருவீர்கள் என்று கமெண்ட்களை அள்ளி வீசி வந்தனர் அவரது ரசிகர்கள்.

அதேபோல படத்திற்கு மற்றொரு முக்கிய பங்காற்றியது அனிருத் தான். அனிருத் இசை இல்லை என்றால் படம் ஓடியே இருக்காது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே அனிருத்துக்கும் ஏதாவது தர வேண்டும் என மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

முதலில் வெளியான மீமில் அப்போ எனக்கு ஒன்னும் இல்லையா என்று தமன்னா கலாநிதி மாறனை பார்த்து கேட்பது போலவும், ஐயோ தமன்னா உனக்கு ஸ்கூட்டி ஆர்டர் போட்டு இருக்கிறேன் நாளைக்கு தருகிறேன் என்று கலாநிதி மாறன் சொல்வது போலவும் ஒரு மீம் வெளியாகி இருக்கிறது.

தொடர்ந்து அட்லீஸ்ட் தமன்னாவுக்கு ஒரு ஸ்கூட்டி பெப்பாச்சும் கிப்ட் தரலாம்ல என்று ஒருவர் கேட்பது போலவும், பின்னர் அனிருத்துக்கு அடுத்தது கொடுப்பீங்களா? என்று கேட்பது போலவும் ஒரு மீம்ஸ் வெளியாகி இருக்கிறது.

அதேபோல விஜய் ரசிகர்கள் வருடா வருடம் 5 கோடி தந்துட்டே தான் இருக்கேன். எனக்கு ஒரு கார் பொம்மையாச்சும் கொடுக்கலாம்ல என்று கேட்பது போல மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.