இயக்குனர் சேரன் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சேரன். இவர் 1997 ஆம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் போர்க்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல படங களை இயக்கி நடித்திருந்தார். மேலும் ராமன் தேடிய சீதை, பிரிவோம் சந்திப்போம், யுத்தம் செய், ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை போன்ற பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.

இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு திருமணம் என்னும் படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு ஆனந்தம் விளையாடும் வீடு என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் எந்த படத்திலும் பெரிய அளவில் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். இதற்கிடையில் பிக் பாஸ் சீசன் 3யிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்த பின்னர் விஜய் சேதுபதியை வைத்து படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார். பின்னர் அது கைவிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது அவர் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கன்னடத்தில் கிச்சா சுதீப் ஹீரோவாக நடிக்க இருக்கும் புதிய படத்தை சேரன் இயக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து தற்போது இயக்குனர் சேரன் கன்னட திரையுவதற்கு முதன்முதலாக காலடி எடுத்து வைக்கிறார். சேரனுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.!
We are very excited to announce our next film in Kannada with the one & only BAADSHAH @KicchaSudeep ♥️🙏
#Kichcha47 – Directed by the veteran Filmmaker @directorcheran 🥁💥@iampriya06@TheSudeepTrends@KicchafansKKSFA@KSSS_Official_ #HBDKicchaSudeep pic.twitter.com/auRS8vUPEX
— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 2, 2023