கௌதமின் வாரிசை வயிற்றில் சுமக்கும் ஐஸ்வர்யா.! இடிந்து போன கோடீஸ்வரி.! ஆஹா கல்யாணம் Promo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஹா கல்யாணம் சீரியலில் தற்போது ஐஸ்வர்யா கௌதமின் வாரிசை தனது வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ஐஸ்வர்யாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருந்த நிலையில் ஐஸ்வர்யா மயங்கி விழுகிறார். அப்போது மாப்பிள்ளை மருத்துவர் என்பதால் ஐஸ்வர்யாவை சோதித்து பார்க்கிறார். அவர் இந்த திருமணம் நடக்காது, ஏனென்றால் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் அதிர்ச்சியில் அப்படியே உடைந்து போய் அமர்ந்திருக்கிறார் கோடீஸ்வரி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கௌதமின் வாரிசை வயிற்றில் சுமக்கும் ஐஸ்வர்யா.! இடிந்து போன கோடீஸ்வரி.! ஆஹா கல்யாணம் Promo 1

விளம்பரம்

ஆஹா கல்யாணம் சீரியலில் ஹீரோவாக இருக்கும் சூர்யாவிற்கு ஐஸ்வர்யா என்கிற பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்து இருப்பார்கள். ஐஸ்வர்யா பணக்காரர் என்று பொய் சொல்லி இந்த திருமணத்திற்கு அவரது தாயார் கோடீஸ்வரி ஏற்பாடு செய்திருப்பார். ஆனால் சூர்யாவின் தம்பி கௌதம் சூர்யாவை பழிவாங்க ஐஸ்வர்யாவை கடைசி நிமிடத்தில் கடத்திவிடுவார். இதனால் ஐஸ்வர்யாவின் தங்கை மஹாவுக்கு சூர்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர். கௌதம் தான் இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் என்பதை தான் நிரூபிப்பேன் என்று சொல்லி மஹா சூர்யாவிடம் சபதம் போட்டிருக்கிறார்.

தொடர்புடையவை  தனலட்சுமியை கீழே தள்ளிவிட்ட மணி.! கைகலப்பாக மாறிய பிக்பாஸ் வீடு.! செம்ம சண்டை.!

கௌதமின் வாரிசை வயிற்றில் சுமக்கும் ஐஸ்வர்யா.! இடிந்து போன கோடீஸ்வரி.! ஆஹா கல்யாணம் Promo 3

விளம்பரம்

ஐஸ்வர்யா பணக்காரி இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் கௌதம் வேறு திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஐஸ்வர்யாவிற்கும் வேறு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக அவரை பெண் பார்க்க வந்த இடத்தில் அவர் மயங்கி விழுகிறார். அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அப்படியே உடைந்து போய் அமர்ந்திருக்கிறார் கோடீஸ்வரி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment