இயக்குனர் சேரன் நடித்துள்ள ‘தமிழ்குடிமகன்’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த காட்சியில் சேரன் படித்த இளைஞராக இருந்த போதிலும் தேர்வு எழுத போகாமல் இறந்த உடலுக்கு இறுதிசடங்குகள் செய்யும் வெட்டியான் வேலை பார்த்து வருகிறார். அப்படி சமூக அரசியலைப் பேசும் காட்சியை ஸ்னீக் பீக்காக படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லஷ்மி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் தான் ‘தமிழ் குடிமகன்’ பெட்டிக்கடை, பகிரி போன்ற திரைப்படங்களை இயக்கிய இவர், தற்போது சேரனை வைத்து தமிழ் குடிமகன் என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சேரனுடன் இணைந்து ஸ்ரீபிரியங்கா, துருவா, வேல ராமமூர்த்தி, லால் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இயக்குனர் கூறும் பொழுது, “உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவை. இதற்குள் சாதி எப்படி வந்தது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

இதுபோல் பலருக்கும் இந்த கேள்விகள் எழுந்திருக்கும். நாதியத்த எங்களை சாதியற்றவங்களாக ஆக்குங்க என்கிற வசனம் படத்தில் வரும். அதுதான் இந்த படத்தின் மையக்கரு. சாதிய பிரச்சனைக்கு இந்த படத்தில் ஒரு தீர்வை சொல்லி இருக்கிறோம்” என்று கூறியிருந்தார். தற்போது வெளியாகி இருக்கும் காட்சிகளை பார்க்கும் பொழுது இது தரமான சாதிய கட்டமைப்புகளை எதிர்த்து கேள்வி கேட்கும் படம் என்பது தெளிவாகத் தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Movie Buff Tamil