சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தயாரிக்க இருக்கும் புது வெப் சீரிஸின் ஷூட்டிங்கை தற்போது சூப்பர் ஸ்டார் துவங்கி வைத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் வெப் சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளாக இருக்கும் சௌந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி பாகம் 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது அவர் மே 6 என்டர்டெயின்மென்ட் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலமாக தற்போது புது வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்.

‘கேங்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில் ‘போர்தொழில்’ படத்தில் நடித்து பலரின் மனங்களை வென்ற அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். நோ ஆபிரகாம் என்பவர் இந்த தொடரை இயக்க இருக்கிறார். விரைவில் இந்த தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கிய நிலையில் தற்போது படக்குழுவினர் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். க்ளிப் அடித்து படபிடிப்பை தொடங்கி வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். இந்த புகைப்படங்களை தற்போது சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

புகைப்படங்களை வெளியிட்ட அவர், “எங்களுடைய குழு இன்று ஒன் அன்ட் ஒன்லியிடம் ஆசிகளை பெற்றது. நன்றி தலைவா, நன்றி சூப்பர் ஸ்டார், நன்றி என்னுடைய அப்பா” என்று குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். பலரும் சௌந்தர்யாவின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இது எந்த வகையான படம்? யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள்? எதை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது என்பதெல்லாம் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My team and I are thrilled to get the blessings of “the one and only” today for our webseries 💥💥🙏🏻🙏🏻💥💥 thank you thalaivaaaa ⭐️⭐️⭐️⭐️ thank you Superstar ✨✨⚡️⚡️💫💫 thank you my dearest appa 🩵❤️🩵❤️🩵❤️ onwards & upwards 🙏🏻🙏🏻🙏🏻 gods and gurus grace !!!! @May6Ent pic.twitter.com/bp2WJOVQ40
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 7, 2023