விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவாக இருக்கும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா, ராஜா ராணி சீரியல் நடிகை விஜே அர்ச்சனா, நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ஜனனி மற்றும் அனிதா சம்பத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் மியூசிக் 3 சீசன்களை முடித்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. பாட்டு பாடுவதை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி மக்கள் பலரின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பல சீசன்களாக பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரித்திகா ஆப்ஷன் C யை தேர்ந்தெடுக்கிறார். அதில் அவருக்கு வண்டியின் சாவி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சாவியை எடுத்துக்கொண்டு அவர் வெளியே வருகிறார்.

அப்போது அந்த நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வண்டியில் அந்த சாவியை போடுமாறு பிரியங்கா கூறுகிறார். அப்படி சாவி பொருந்தி விட்டால் ரித்திகாவுக்கு தான் வண்டி என பிரியங்கா கூறுகிறார். அதே போல் சாவியும் பொருந்தி போகிறது. ரித்திகா பைக்கை வெற்றி பெற்று வீட்டிற்கு எடுத்து செல்கிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television