விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யா ஈஸ்வரியை காட்டிலிருந்து மீண்டும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். ஈஸ்வரிக்கு ஃபோன் செய்யும் கோபியை நோஸ்கட் செய்து ஃபோனை வைத்து விட்டார் ஈஸ்வரி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் ப்ராஜெக்டுக்காக ஈஸ்வரி, பாக்யா, செல்வி, இனியா என நால்வரும் கேரளாவிற்கு டூர் சென்றுள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காட்டுக்குள் வழி தவறி ஈஸ்வரி சென்று விடுகிறார். இதை இனியா கோபிக்கு போன் செய்து சொல்கிறார். பின்னர் ஈஸ்வரியை எப்படியோ பாக்கியா கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். அப்போது ஈஸ்வருக்கு போன் செய்யும் கோபி எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்க, காட்டுக்குள் தான் இருக்கிறேன் என்று பதில் அளிக்கிறார். அப்போது எப்படி தப்பித்தீர்கள் என்று கேட்க என் மருமகள் பாக்யா இருக்கும்போது எனக்கு என்ன கவலை நீ முதலில் போனை வைடா என்று சொல்லி போனை கட் செய்து விடுகிறார்.

பின்னர் அறைக்கு வரும் ஈஸ்வரி நாம் பெண்கள் அனைவரும் இணைந்து இது போல் எங்குமே சென்றதில்லை இனியாவது நாம் எல்லோரும் செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதைக்கேட்ட பாக்யா “நீங்கள் என் அத்தை ஈஸ்வரி தானே?” என்று சொல்ல, வில்லத்தனமாக சிரிக்கிறார் ஈஸ்வரி. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television