உதகை அருகே அவலாஞ்சி மலை கிராமத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்திருந்த நிலையில் தற்போது அதில் அதிரடி திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தான் வளர்த்து வந்த மாட்டை புலிகள் கொன்று விட்டதால் புலிகளை விஷம் வைத்து மாட்டின் உரிமையாளர் கொலை செய்திருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது. அந்த செய்தி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே மலைப் பிரதேசங்களில் வனவிலங்குகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது உண்மைதான். சில சமயங்களில் மனிதர்களை கூட தாக்கி கொன்று விடுவது செய்வது வழக்கமாக இருக்கிறது. யானை, புலி, சிங்கம், கரடி, சிறுத்தை என பல வன விலங்குகள் ஊருக்குள் வந்து வேட்டையாடி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

அதேபோல உதகமண்டலம் அருகே அவலாஞ்சி என்கிற கிராமத்தில் சேகர்(58) என்பவர் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இவரது மாடுகளை சில நாட்களுக்கு முன்பு புலிகள் மாட்டை வேட்டையாடி இருக்கின்றன. இதற்கு பழி வாங்கும் விதமாக சேகர் மாடுகளின் மீது விஷத்தை தடவி வைத்திருக்கிறார். அந்த மாட்டின் மாமிசத்தை சாப்பிட்ட புலிகள் தற்போது இறந்து கிடக்கின்றன.

அவலாஞ்சி அணைப்பகுயில் நீர் வெளியேறும் பகுதியில் இந்த இரண்டு புலிகள் இறந்து கிடப்பதைக் கண்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது அவர்களுக்கு இந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சேகரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தனது மாட்டைக் கொன்ற இரண்டு புலிகளை பழிக்குப் பழி வாங்கிய அந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Thanthi TV