எதிர்நீச்சல் சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் நந்தினி ஒரு வழியாக முதியோர்கள் இல்லத்திற்கு சென்று சமைத்த உணவை பரிமாறி அவர்களிடமிருந்து நல்ல பெயரையும் பெற்று விட்டார். இதற்கிடையில் மறுபுறம் ஆதி குணசேகரன் வீட்டில் உள்ளவர்களிடம், “ஏதோ சரியில்லை, ஒருத்தி பொங்கலை எடுத்துக் கொண்டு கோவிலுக்கு போகிறேன் என்கிறார். இன்னொருத்தி வீட்டிற்கு வந்தவர்களை எதுவும் பேசாமல் மாடிக்கு அழைத்து செல்கிறார். ஏதோ தவறாக தெரிகிறது” என்று கூறிக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது குறிக்கிட்டு பேசும் கரிகாலன் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது, இங்கு ஏதோ தவறாக நடக்கிறது என்று கூறுகிறார். அப்போது விசாலாட்சி கரிகாலனைப் பார்த்து, “நீ சும்மா இருக்க மாட்டாயா? இருக்கிற பிரச்சனையில் நீ வேற ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று திட்டுகிறார். அப்போது கோபமான கரிகாலன் எனக்கு உங்கள் மேல் தான் சந்தேகமாக இருக்கிறது என்று விசாலாட்சியிடம் கூற விசாலாட்சி திரு திருவென முழிக்கிறார்.

அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun tv