எரிந்து மோசம் போன 50 லட்சம் பெட்ரோல் பாரல்கள்!! பெட்ரோல் விலை அதிகமாகும் அபாயம்!!

எரிந்து மோசம் போன 50 லட்சம் பெட்ரோல் பாரல்கள்!! பெட்ரோல் விலை அதிகமாகும் அபாயம்!! 1

ரியாத்தில் என்ற சவுதி அரேபியாவின் தலைநகரில் 330 கி.மீ. தூரத்தில் அப்கைக் எனும் இடத்தில் அமைந்திருக்கிறது அரம்கோ நிறுவனம். இந்த நிறுவனம் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், இதிலும் குராய்ஸ் எனும் இடத்தில் உள்ள எண்ணெய் வயல் ஆகியவற்றிலும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு ஏற்பட்ட தீ யினால் சுமார் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்கள் எரிந்துவிட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஓமனிலிருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அமைப்பு பொறுப்பேற்றுள்ள து. என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் அனைத்து நாடுகளின் மத்தியில் சவுதி அரேபியா மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக உள்ளது. நாள் ஒன்றுக்கு ஏழு மில்லியன் பேரல்களை அந்நாடு ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்குப் பிறகு அரம்கோ எண்ணெய் நிறுவனத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் சவூதி அரேபியாவின் மொத்த உற்பத்தியில் பாதி அளவான 5.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்படும் என்று சவுதியின் இளவரசரும் அந்நாட்டின் எரிசக்தித் துறை மந்திரியுமான அப்துலாசிஸ் பின் சல்மான் தெரிவித்திருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  வறுமையை ஒழிப்பதில் இந்தியா முன்னேற்றம்!ஐ.நா., ஆய்வறிக்கை!!

ஏற்கெனவே பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் சவுதியில் மீண்டும் எண்ணெய் உற்பத்தி தொடங்கும்வரை அமெரிக்காவின் எண்ணெய் சேமிப்பை வெளியிடுவதாக டிரம்ப் உறுதியளித்த பிறகு விலையில் சிறிது மாற்றங்கள் இருந்தன. இருந்தபோதிலும், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் முடிவுசெய்துள்ளது .இந்தத் தாக்குதலால் இந்தியா பெரிய பெட்ரோல் விலை உயர்வை சந்திக்கும் அபாயம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 7.40 % சவுதி அரேபியாவிலிருந்து தான் இறக்குமதி செயற்படுகிறது. தற்போதைய சூழ்நிலையால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 20 சதவிகிதம் வரை உயரக் கூடும். இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment