மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் சதீஷ்.! வித்தியாசமான டீசரை வெளியிட்ட படக்குழு.!

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சதீஷ் நடிக்கும் புது படத்தின் டைட்டிலை வித்தியாசமான முறையில் டீசருடன் வெளியிட்டு இருக்கின்றனர். சமீப காலமாக காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சதீஷ் பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். சேலத்தில் பிறந்து வளர்ந்த சதீஷ், கிரேசி மோகன் உடன் இணைந்து பல மேடைகளில் காமெடியனாக நடித்திருக்கிறார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர் முதல் படமே சிவகார்த்திகேயனுடன் இணைந்து எதிர்நீச்சல் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பராக டைலர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் சதீஷ். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் சதீஷ்.! வித்தியாசமான டீசரை வெளியிட்ட படக்குழு.! 1
பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கும் சதீஷ், ‘நாய் சேகர்’என்கிற படத்தில் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ‘வித்தைக்காரன்’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவர் ‘முஸ்தபா முஸ்தபா’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பிரவீன் சரவணன் இயக்க இருக்கிறார். பிரதீப் என்பவர் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் சதீஷ் உடன் இணைந்து மோனிகா, விஜய் டிவி புகழ், ஐஸ்வர்யா தத்தா, கருணாகரன், மகேஸ்வரி, விஜே பார்வதி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  அட கடவுளே, நம்ப பாரதிராஜாவா இது!!மது போதையில் இளம் பெண்களுடன் குத்தாட்டம்!!

மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் சதீஷ்.! வித்தியாசமான டீசரை வெளியிட்ட படக்குழு.! 3
படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. படத்தின் டைட்டிலை தற்போது விஜய் சேதுபதி வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதி பகிர்ந்த அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்திருக்கும் சதீஷ், “உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சகோதரா” என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது அவரின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Saregama Tamil

விளம்பரம்

Leave a Comment