4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

தமிழ் சினிமாவில் தற்போது முண்ணனி நடிகர்களாக வலம் வரும் நான்கு பேருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் இந்த நடிகர்களை வைத்து தயாரிப்பாளர்கள் அடுத்து படம் இயக்குவார்களா? அவர்களின் படங்கள் வெளியாகுமா? என்பது குறித்த சிக்கல் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரெட் கார்ட் பிரச்சனை சில வருடங்களாக அடிக்கடி எழுந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 1

விளம்பரம்

தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் நஷ்டம் ஏற்படுத்திய நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் முடிவு செய்திருந்தது. இதற்காக தயாரிப்பாளர் சங்கம் கூடி தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்த லிஸ்டில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து இருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 3

விளம்பரம்

தனுஷ், எஸ்.ஜே சூர்யா, விஜய் சேதுபதி, அமலாபால், வடிவேலு, ஊர்வசி, சோனியா அகர்வால், அதர்வா உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது நான்கு நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் விஷால், சிம்பு, தனுஷ் மற்றும் அதர்வா ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது தகவல் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடையவை  Beast | Jolly O Gymkhana - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 5

விளம்பரம்

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது சங்க பணத்தில் முறையாக வரவு செலவு கணக்கு காட்டாதது குறித்து நடிகர் விஷாலுக்கும், தேனாண்டாள் முரளி தயாரிக்கும் படத்தில் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக தனுஷுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 7

விளம்பரம்

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது அளித்த புகார் மீது பலமுறை பேச்சுவார்த்தை நடத்தும் பிரச்சனை முடியாத நிலையில் அதை மேற்கோள் காட்டி நடிகர் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் மதியழகன் கொடுத்த புகாரில் பதிலளிக்காமல் தொடர்ந்து நழுவிக் கொண்டிருப்பதால் நடிகர் அதர்வாவுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

4 முன்னணி நடிகர்களுக்கு அதிரடியாக கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.! தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு 9

விளம்பரம்

 

இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதால் இவர்கள் தொடர்ந்து படத்தில் நடிப்பார்களா? என்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது.

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Thanthi TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment