மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘ஜவான்’ திரைப்படத்தின் 12வது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவலை தற்போது படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். 15 நாட்களில் சுமார் ரூ.900 கோடியை நெருங்கி மகத்தான சாதனை படைத்திருக்கிறது ‘ஜவான்’ திரைப்படம். இயக்குனர் அட்லீ, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக ஹிந்தியில் மிகப்பெரிய இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி, சஞ்சய்தத், பிரியாமணி தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் உள்ள 4500 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மூன்று மடங்கு வசூலை 12 நாட்களில் நெருங்கி இருக்கிறது. முதல் நாளிலேயே ரூ.129.6 கோடியை வசூலித்திருந்ததாக படத்தை தயாரித்த ரெட் சில்லீஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி 12 நாட்களாக தொடர்ந்து தினசரி கலெக்ஷன் நிலவரத்தை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி இரண்டாவது நாள் ரூ.240 கோடி, மூன்றாவது நாள் ரூ.384 கோடி, ஐந்தாவது நாள் ரூ.520 கோடி வசூலைக் குவித்து இருந்தது. வசூல் கொஞ்சம் குறைய தொடங்கிய நிலையில் 12வது நாள் வசூலில் சுமார் ரூ.883.68 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும், நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதாலும் ‘ஜவான்’ திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக குறைந்திருந்த ஜவானின் வசூல் மூன்றே நாட்களில் ஆயிரம் கோடியை நெருங்கி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இந்த வசூல் ஆயிரம் கோடியைத் தாண்டிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய முதல் ஹிந்தி படத்திலேயே ஆயிரம் கோடி வசூலை குவித்த தமிழ் இயக்குனர் என்கிற பெருமையை அட்லீ பெறுவது குறிப்பிடத்தக்கது.
Jawan’s explosive rule at the box office continues! 🔥🙌🏻
Book your tickets now! https://t.co/B5xelUahHO
Watch #Jawan in cinemas – in Hindi, Tamil & Telugu. pic.twitter.com/mIj9QFakgR
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) September 19, 2023