“எந்தா சாரே மனசுல ஆயோ?” ஜெயிலர் படத்திலிருந்து வர்மனின் மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு

சமீபத்தில் வெளியாகி சுமார் ரூ.600 கோடி வசூலை குவித்திருக்கும் ஜெயிலர் படத்திலிருந்து வில்லன் வர்மனின் தீம் சாங்கை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருந்த இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. சுமார் ரூ.600 கோடி வசூலை குவித்திருந்த இந்த படம் ஒரு மாதத்திற்கு பின்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியால் குஷியில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் படத்தில் நடித்தவர்களுக்கும் இயக்குனருக்கும் பரிசுகளை வாரி வழங்கி வருகிறார்.

"எந்தா சாரே மனசுல ஆயோ?" ஜெயிலர் படத்திலிருந்து வர்மனின் மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு 1
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு காருடன் பரிசுத் தொகையும் கொடுத்து கௌரவித்திருந்தார் கலாநிதிமாறன். தொடர்ந்து படத்தில் பணியாற்றிய சுமார் 400 பேருக்கு தங்க நாணயங்கள் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தார். தொடர்த்து தீம் சாங்குகள் மற்றும் பாடல்களை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் படக் குழுவினர். அந்த வகையில் தற்போது வில்லனாக நடித்திருந்த விநாயக்கின் (வர்மனின்) தீம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! Tamilglitz Rating (?/5)

"எந்தா சாரே மனசுல ஆயோ?" ஜெயிலர் படத்திலிருந்து வர்மனின் மாஸான வீடியோவை வெளியிட்ட படக்குழு 3

இந்த வீடியோவை சுமார் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment