“நான் காட்டுற பாசம் உண்மையானது” காயப்படுத்திய ஹவுஸ் மேட்ஸ்.! கண்கலங்கிய விசித்ரா. !

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி சுமார் 40 நாட்களை கடந்து விட்டது. ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீசனில் விறுவிறுப்பான கட்டங்கள் பல நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் பிக்பாஸ் அனைவருக்கும் புது டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது ஆண்கள் அனைவரும் பெண் போட்டியாளர்கள் போலவும், பெண் போட்டியாளர்கள் அனைவரும் ஆண் போட்டியாளர்கள் மாற வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நான் காட்டுற பாசம் உண்மையானது" காயப்படுத்திய ஹவுஸ் மேட்ஸ்.! கண்கலங்கிய விசித்ரா. ! 1

விளம்பரம்

அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களை போல உடைகளை மாற்றிக் கொண்டும் மேக்கப் செய்துகொண்டும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் தினேஷுக்கு சீக்ரெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கை புரிந்து கொள்ளாத விஷ்ணு, தினேஷிடம் கோபமாக பேசுகிறார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இப்படியாக காலை முதல் ஒன்றன்பின் ஒன்றாக ப்ரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது.

"நான் காட்டுற பாசம் உண்மையானது" காயப்படுத்திய ஹவுஸ் மேட்ஸ்.! கண்கலங்கிய விசித்ரா. ! 3

விளம்பரம்

அதில் விசித்ரா ஹவுஸ் மேட்ஸ் அனைவரிடமும் கண்கலங்கி பேசிக் கொண்டிருக்கிறார். அதில், “இங்கு இருக்கும் அனைவரிடமும் நான் காட்டும் அன்பு உண்மையானது. அனைவரையும் என் பிள்ளை போல் தான் பார்க்கிறேன், என்னை இனிமேல் விசித்ரா மேம் என்று அனைவரும் அழைக்க வேண்டும்” என்று கூறுகிறார். அப்போது குறிக்கிடும் மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் நீங்களும் இனிமேல் எங்களை மேம் என்று தான் அழைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். மீண்டும் தங்களது ஆட்டத்தை மாயவும் பூர்ணிமாவும் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment