சன் டிவியின் பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் இந்த 4 குழந்தைகளும் யாருனு கண்டுபிடிங்க பாப்போம்.?

சமீப காலமாக இணையத்தில் சில விஷயங்கள் ட்ரெண்டாவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் சமூக வலைத்தளங்களில் புதுப்புது விஷயங்கள் ட்ரெண்டாக தொடங்கியது. குறிப்பாக சீரியல் பிரபலங்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் பிரபலமாகத் தொடங்கியது. சீரியல்கள் நடிகர்கள், வெள்ளித்திரை நடிகர்கள் என அனைவரும் கொரோனா சமயத்தில் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் சமையல் வீடியோ, விளாக் வீடியோ என நேரத்தை செலவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக தங்களது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், வீட்டை சுற்றிக் காண்பிப்பது என அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். இது ரசிகர்களுக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருந்தது.

சன் டிவியின் பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் இந்த 4 குழந்தைகளும் யாருனு கண்டுபிடிங்க பாப்போம்.? 1

விளம்பரம்

பின்னர் பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள், குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாவது வழக்கமாகி வந்தது. அந்த ட்ரெண்டிங் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நான்கு குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த நடிகைகள் யார்? என கண்டுபிடிக்க சொல்லி புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். பலராலும் அந்த குழந்தைகளின் புகைப்படத்தை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் வேறு யாரும் இல்லை. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் குணசேகரன் வீட்டு மருமகள்களாக நடித்து வரும் கனிகா, ஹரிப்பிரியா, மதுமிதா, பிரியதர்ஷினி ஆகியோரின் சிறு வயது புகைப்படம் தான் அது.

தொடர்புடையவை  நடிகை நிரோஷாவின் 53வது பிறந்தநாள்.! கேக் வெட்டி சர்ப்ரைஸ் செய்த 'பாக்கியலட்சுமி' குடும்பம்.!

சன் டிவியின் பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் இந்த 4 குழந்தைகளும் யாருனு கண்டுபிடிங்க பாப்போம்.? 3
சன் டிவி மட்டுமல்லாமல் சின்னத்திரை உலகிலேயே டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் மனம் கவர்ந்த நடிகைகளாக இந்த நால்வரும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். மருமகள்கள் என்றால் இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment