கார்டை காட்டிய கமல்.! வெளியேறிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா? ப்ரோமோ இதோ.!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் இதுவரை 6 சீசன்களும், பிக் பாஸ் அல்டிமேட் என்கிற சீசனும் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் கமலஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று அனைத்து பிராந்திய மொழிகளிலும் இது ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

கார்டை காட்டிய கமல்.! வெளியேறிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா? ப்ரோமோ இதோ.! 1
இந்த ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது. இதில் ஸ்மால் பாஸ், பிக் பாஸ் என்று இரண்டு வீடுகள் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களும், அதன் பின்னர் ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இந்த நிலையில் ஏழாவது வார கேப்டனாக தினேஷ் தேர்வாகி இருக்கிறார். இந்த வாரம் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இல்லாமல் அனைவரும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சண்டை சச்சரவுடன் முடிந்த இந்த வார இறுதியில் விசித்ரா, மணி, ரவீனா, பூர்ணிமா, விக்ரம், ஆர்ஜே பிராவோ, கானா பாலா என மொத்தம் எட்டு பேர் நாமினேட் ஆகியிருந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  குட்டி அஜய் பொறந்து இருக்கான்.! மகன் பிறந்த செய்தியை செம்ம Cute ஆக அறிவித்த அஜய் கிருஷ்ணா.!

கார்டை காட்டிய கமல்.! வெளியேறிய அந்த போட்டியாளர் யார் தெரியுமா? ப்ரோமோ இதோ.! 3

இதில் விக்ரம், அக்ஷயா, பிராவோ, கானா பாலா ஆகிய நால்வரும் மிகுந்த போரிங் போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர். அவர்கள் சுவாரசியமாக எந்த விஷயத்தையும் செய்வதில்லை. குறிப்பாக இளம் போட்டியாளர்களாக இருக்கும் பிராவோ, விக்ரம், அக்ஷயா மூவரும் சுவாரசியமில்லாமல் விளையாடி வருகின்றனர். விக்ரம் அல்லது அக்‌ஷயா இருவரில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்று கருத்து நிலவி வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது கானா பாலா வெளியேற்றப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது நியாயமான வெளியேற்றம் இல்லை முதலில் விக்ரம் அல்லது அக்‌ஷயா தான் வெளியேற்றப்பட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment