பசுபதி கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய விஜய்.! ‘மகாநதி’ ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் காவேரி பற்றி தவறாக பேசிய பசுபதியை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார் விஜய். இதனால் அவமானத்தில் பசுபதி அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. “நான்கு சகோதரிகளின் கதை” என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடரில் இரண்டாவது சகோதரியாக இருக்கும் காவேரி நிவின் என்பவரை காதலித்து வருகிறார். ஆனால் விதிவசத்தால் காவேரி விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணம் ஓராண்டு ஒப்பந்தத்துடன் நடைபெற்றது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பசுபதி கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ 1

விளம்பரம்

திருமணம் முடிந்து விஜய்க்கும் காவேரிக்கும் வரவேற்பு நடந்து வருகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவேரியின் குடும்ப எதிரியாக இருக்கும் பசுபதி வருகிறார். அங்கு அவர் விஜயிடம் காவேரியும் பழைய காதலனான நிவினும் பழகியது குறித்த வீடியோவை போட்டு காண்பிக்கிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜயிடம் காவேரி குறித்து தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் பசுபதி. இதனால் கோபமடைந்த விஜய், பசுபதி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். “காவேரி என் மனைவி, என் மனைவியை பற்றி தவறாக பேசுவதற்கு எவனுக்கும் எந்த உரிமையும் இல்லை.

தொடர்புடையவை  வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கோ.! உனக்கு நான் பணம் தரேன்.! எழிலை மிரட்டும் தயாரிப்பாளர்.!

பசுபதி கன்னத்தில் ஓங்கி அறைவிட்டு கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய விஜய்.! 'மகாநதி' ப்ரோமோ 3
அவளுடைய கடந்த காலம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், அது பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் தற்போது அவள் என் மனைவியாகிவிட்டாள். அவளைப் பற்றி தவறாக பேச யாருக்கும் எந்த தகுதியும் இல்லை” என்று கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment