தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் நேற்று தயாரிப்பாளர் லலித் குமார் மகன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகம் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகிலும் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகி உலகம் முழுவதிலும் வசூலை வாரி குவித்து வருகிறது.

‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து இருந்த தளபதி விஜயின் ‘லியோ’ படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.

வெளியான முதல் நாளே சுமார் ரூ.148.5 கோடி ரூபாயை வசூலித்து மகத்தான சாதனையை படைத்திருந்தது. இதை படத்தை தயாரித்திருந்த ‘7 ஸ்கீரீன் ஸ்டியோ’ தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

தொடர்ந்து ரூ.600 கோடி வசூலை கொடுத்து இருந்தது இந்த திரைப்படம். விரைவில் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் தனது அடுத்த படமான ‘தளபதி 68’ல் வெங்கட் பிரபுவுடன் இணைந்து இருக்கிறார்.

படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ நிறுவன தலைவர் லலித் குமார் மகன் திருமண வரவேற்ப்பில் கலந்து கொண்டார்.

போப்ரா, மகான், காட்டுவாக்குல இரண்டு காதல் போன்ற பல படங்களை தயாரித்தவர் லலித் குமார். இவரது மகனின் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை நிற உடையில் விஜய் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
YouTube Video Embed Code Credits: Bingoo Box