‘குட் நைட்’ படத்தின் மூலமாக பலரின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வரும் நடிகை மீதா ரகுநாதனுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. கணவருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

2022ம் ஆண்டு வெளியான ‘முதல் நீ முடிவும் நீ’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் மீதா ரகுநாதன். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது. தனது யதார்த்தமான நடிப்பால் பல இளைஞர்களின் உள்ளத்தை கவர்ந்திருந்தார். தொடர்ந்து இவருக்கு திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்று சொன்னால் அது ‘குட் நைட்’ திரைப்படம் தான்.

பின்னர் 2023ம் ஆண்டு சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான ‘குட் நைட்’ திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனுடன் இணைந்து நடித்திருந்தார் மீதா. சாந்தமான முகம், கோபப்படாத சுபாவம், ஹோம்லியான மனைவியாக நடித்த அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தின் மூலமாக இளைஞர்கள் பலருக்கும் இவர் போன்ற ஒரு பெண் மனைவியாக கிடைக்க வேண்டும் என்கிற ஆசை எழுந்தது மறுக்க முடியாத உண்மை. குறட்டை விடும் கணவரை சமாளித்துக் கொண்டு பின்னர் அவரை புரிந்து கொண்டு அவருடன் சேர்ந்து வாழும் கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார் மீதா. இந்த நிலையில் இன்று அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது.

அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மஞ்சள் நிற புடவையில் மீதா ரகுநாதன் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பின்னர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் தனது வருங்கால கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரை தான் விரைவில் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல்களும் வெளியாகி வருகிறது.

பலரும் மீதாவுக்கு தங்களது வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்