விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாக்யாவையும் பழனிச்சாமியையும் பார்க்கும் கோபி அவர்கள் இருவர் குறித்தும் தவறாக பேசுகிறார். அப்போது கோபத்தில் கொந்தளிக்கும் பாக்யா, கோபியைப் பார்த்து “வீட்டை விட்டு வெளியே போ” என்று கத்துகிறார். இதனால் பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் கோபி. அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்து கொள்கிறார் கோபி. இதனால் பாக்யா கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து பணத்தை கொடுத்து கோபி கட்டிய வீட்டை தன் வீடாக மாற்றி எழுதிக் கொண்டார்.
ஆனாலும் அவ்வப்போது கோபி பாக்யாவின் வீட்டிற்கு வந்து அவருக்கு தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். மேலும் இரண்டாவது மனைவி ராதிகாவையும் தன்னுடன் அழைத்து வந்து விடுகிறார். தற்போது கதைப்படி பாக்யாவும், ராதிகாவும் நல்ல நண்பர்களாக மாறுகின்றனர் பல இடங்களில் ராதிகா பாக்யாவுக்காக பரிந்து பேசி வருகிறார்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பழனிச்சாமியும், பாக்யாவும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் கோபி இருவரையும் மிகவும் கீழ்த்தரமாகவும், தவறாகவும் பேசுகிறார். இதனால் கோபம் அடைந்த பாக்யா கோபியை வீட்டை விட்டு வெளியே போ என்கிறார். இது என் வீடு நீ யார் என்று கோபி சொல்ல, உன் வீடா? இது என் வீடு என்று சொல்லி பாக்யா வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television