பிரபல சின்னத்திரை நடிகை ரட்சிதா மஹாலட்சுமி – தினேஷ் இருவரின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூருவைச் சேர்ந்த ரட்சிதா மகாலட்சுமி நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து நடிக்கத் தொடங்கினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் நடித்தார். அதன் பின்னர் இவருக்கு திருப்புமுனையை கொடுத்தது ‘சரவணன் மீனாட்சி’ தான். இந்த சீரியலின் 3 பாகத்திலும் மீனாட்சியாக நடித்து அசத்தி இருந்தார்.

அதன் பின்னர் ஜீ தமிழில் ‘நாச்சியார்புரம்’ என்கிற சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சீரியலில் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி விலகி கலர்ஸ் தமிழுக்குச் சென்ற அவர் ‘இது சொல்ல மறந்த கதை’ என்கிற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த நாடகம் திடீரென முடிக்கப்பட்டது. அதன் பின்னர் பிக்பாஸில் கலந்து கொண்டார். பிக்பாஸ் சீசன் 6ன் முக்கிய போட்டியாளராக இருந்த அவர் சில நாட்களுக்குப் பின்னர் வெளியேற்றப்பட்டார். தற்போது எந்த நாடகத்திலும் கமிட்டாகாமல் இருந்து வருகிறார்.

ரட்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது கணவர் தினேஷ் பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் தனது திருமண வாழ்கை முறிவு குறித்து பேசியிருந்தார். பிக்பாஸ் முடிந்து செல்லும் போது தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று பேசியிருந்தார்.

ஆனால் ரட்சிதா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரும் பதிவுகளைப் பார்க்கும் போது இனி தினேஷுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தற்போது தினேஷ் ரட்சிதாவின் திருமண புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.

நீங்களும் அவர்களின் திருமண வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Rachitha Mahalakshmi