குணசேகரன் சூழ்ச்சிக்கு பலியான ஈஸ்வரி.! சாருபாலாவை எதிர்த்து தேர்தலில் போட்டி.! ப்ரோமோ இதோ

‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குணசேகரன் சூழ்ச்சிக்கு தற்போது ஈஸ்வரி பலியாகி இருக்கிறார். அதாவது சாருபாலாவை எதிர்த்து ஈஸ்வரியை களமிறக்க குணசேகரன் முடிவெடுத்திருந்த நிலையில், தற்போது சாருபாலாவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக ஈஸ்வரி குடும்பத்துடன் வந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. ஆதி குணசேகரன் மற்றும் எஸ்கேஆர் ஆகிய குடும்பத்திற்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வரும் நிலையில், தற்போது அது தேர்தலிலும் எதிரொலிக்க இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரன் சூழ்ச்சிக்கு பலியான ஈஸ்வரி.! சாருபாலாவை எதிர்த்து தேர்தலில் போட்டி.! ப்ரோமோ இதோ 1
நடக்க இருக்கும் தேர்தலில் எஸ்கேஆர் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவி சாருபாலாவை தேர்தலில் நிற்க வைக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன், தான் அவருக்கு எதிராக நின்றால் சரிவராது என நினைத்து தனது மனைவி ஈஸ்வரியை நிற்க வைக்க முடிவெடுக்கிறார். “பொம்பளைகளை மோதிவிட்டு நாம் பின்னால் நின்று ஆட்டி வைப்போம்” என்று குணசேகரன் முடிவெடுக்கிறார். அதற்காக ஈஸ்வரியை அவர் சமாதானப்படுத்துகிறார். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மனு தாக்கல் செய்ய ஈஸ்வரி, ஜனனி, குணசேகரன் என அனைவரும் வருகின்றனர். அப்போது சாருபாலா ஈஸ்வரி குறித்து சி கேள்விகளை எழுப்புகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  உடல் எடையை குறைத்து பழையபடி மாறிய ஆல்யா..சீக்கிரம் சஞ்சீவோட சீரியல்ல பாக்கலாம்.!

குணசேகரன் சூழ்ச்சிக்கு பலியான ஈஸ்வரி.! சாருபாலாவை எதிர்த்து தேர்தலில் போட்டி.! ப்ரோமோ இதோ 3

நான் எந்த நிர்பந்தமும் இல்லாமல் இந்த தேர்தலில் நிற்கிறேன். ஆனால் ஈஸ்வரியால் அவ்வாறு கூற முடியுமா? என்று கேட்கிறார். அப்போது கதிருக்கும் அரசுக்கும் வாய் தகராறு ஏற்படுகிறது. அப்போது குறுக்கே வரும் சக்தி, தேர்தலில் யார் அதிக ஓட்டுகள் பெறுகிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும், போய் வேலையைப் பாருங்கள் என்று சொல்லி கத்துகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment