பிக் பாஸ் சீசன் 7ன் இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. 59வது நாளான இன்று விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையே பலத்த சண்டை எழுந்துள்ளது. காலை முதலே இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கடுமையாக வார்த்தைகளால் திட்டிக் கொள்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பல சுவாரசியமான கட்டங்களுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இறுதியாக நடந்த ‘பூகம்பம்’ டாஸ்க்கில் போட்டியாளர்கள் தோல்வியை தழுவியதால் பிராவோ மற்றும் அக்ஷயா இருவர் வெளியேற்றப்பட்டு விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகிய இருவரை வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே அனுப்பி உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்கு உள்ளே வந்த உடனேயே பிரச்சினை ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறது. இருவரும் வெளியில் நடந்த விஷயங்களை உள்ளே வந்து கூறியதால் தற்போது போட்டியாளர்கள் பயத்தில் உறைந்து போயிருக்கின்றனர். மேலும் தங்களது இமேஜை மாற்றும் விதமாக அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே நிக்ஸன் கேப்டன் ஆனது முதல் ஏதாவது ஒரு பிரச்சனை எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோவில் கேப்டனுக்கு அரசர் பதவி கொடுக்கப்படுகிறது. சர்வாதிகாரியாக மாறும் நிக்ஸன் ஹவுஸ் மேட்ஸை மழையில் முட்டி போட வைக்கிறார். இதனால் இந்த வீட்டில் பிரச்சனை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக அர்ச்சனா மற்றும் விஷ்ணுவுக்கு இடையே சண்டை எழுந்துள்ளது. அர்ச்சனாவை ‘தண்டம்’ என்றும், ‘வேஸ்ட்’ என்றும் விஷ்ணு திட்ட பதிலுக்கு அர்ச்சனா விஷ்ணுவை ‘குப்பை’ என திட்டுகிறார். மேலும், “இனிமேல் நான் இந்த வீட்டில் அழுதுட்டேனா பார்த்துக்கோ” என்று சொல்லி விஷ்ணுவிடம் அவர் சபதம் போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television